/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்
/
விபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்
விபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்
விபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்
ADDED : ஆக 05, 2024 10:23 PM

கோவை:அரசு மருத்துவமனையில் வாலிபரின் உடல் உறுப்புக்கள், தானம் பெறப்பட்டன.
கோவை பேரூரை அடுத்த காளம்பாளையத்தை சேர்ந்தவர் ஸ்ரீராம், 25; தனியார் நிறுவனத்தில் எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த, 3ம் தேதி தனது நண்பருடன் பைக்கில் காளம்பாளையத்தில் இருந்து, மாதம்பட்டி ரோட்டில் சென்றார்.
செல்லப்பக்கவுண்டன் புதுார் அருகே, அந்த வழியாக எதிரே வந்த மற்றொரு பைக், அவர்கள் மீது மோதியது. துாக்கி வீசப்பட்ட ஸ்ரீராம், பலத்த காயம் அடைந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக, அவரது குடும்பத்தினர் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர்கள் பரிசோதனை செய்ததில், அவர் மூளைச்சாவு அடைந்திருந்தது தெரிந்தது. இதையடுத்து, ஸ்ரீராமின் குடும்பத்தினர் அவரது உடல் உறுப்புகளை, தானம் செய்ய முன் வந்தனர்.
தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி ஸ்ரீராமின் கண்கள், இதயம், இதய வால்வுகள், கல்லீரல், சிறுநீரகங்கள், நுரையீரல் ஆகியவை தானமாக பெறப்பட்டன.
ஸ்ரீராமின் குடும்பத்தினருக்கு மருத்துவமனை டீன் நிர்மலா, மருத்துவமனை ஊழியர்கள் ஆறுதல் கூறினர்.