/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காடுகளுக்கு வெளியே மரம் வளர்ப்பு திட்டம் விவசாயிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
/
காடுகளுக்கு வெளியே மரம் வளர்ப்பு திட்டம் விவசாயிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
காடுகளுக்கு வெளியே மரம் வளர்ப்பு திட்டம் விவசாயிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
காடுகளுக்கு வெளியே மரம் வளர்ப்பு திட்டம் விவசாயிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
ADDED : ஆக 19, 2024 01:34 AM
பொள்ளாச்சி;காடுகளுக்கு வெளியே மரம் வளர்ப்புத் திட்டத்தின் கீழ், கிராமங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட விவசாயிகளுக்கு, முதன்மை பயிற்சியாளருக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.
சர்வதேச வனவியல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் உலக வேளாண் காடுகளுக்கான மையம் சார்பில், இந்தியக் காடுகளுக்கு வெளியே மரம் வளர்ப்புத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
அவ்வகையில், காடுகளுக்கு வெளியே மர வளர்ப்பை மேம்படுத்துவதில், ஆர்வமுள்ள நபர்களைக் கொண்டு குழு உருவாக்கம் செய்யப்படுகிறது.
அதன்படி, மாவட்டத்தில், உள்ள கிராமங்களில் இருந்து, தேர்ந்தெடுக்கப்படும் நபர்களை, முதன்மை பயிற்சியாளராக்க, இரு கட்ட திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது.
முதற்கட்ட பயிற்சி ஏற்கனவே நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், இரண்டாம் கட்ட பயிற்சி கோமங்கலம் கிராமத்தில் நடந்தது.
இதில், முதற்கட்ட பயிற்சி வகுப்பில் பங்கேற்க முதன்மை பயிற்சியாளர்களும், பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய கிராமங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
முன்னாள் வேளாண் இணை இயக்குனர் சந்தானகிருஷ்ணன், பயிற்சி வகுப்பை துவக்கி வைத்தார். தொகுதி மேலாளர் ஜோஸ்லைன், மாதிரி எடுப்பதன் அவசியம் மற்றும் முறைகள் குறித்து பேசினார். நிகழ்ச்சியில், உலக வேளாண் காடுகள் மைய திட்டத்தின் மாவட்ட குழு உறுப்பினர்கள் தீபக்தயானந்தன், மோகன்தாஸ், கிருத்திகா, தீபிகா ஆகியோர், அமெரிக்க பன்னாட்டு வளர்ச்சி முகமையின் கீழ் நடைபெறும் காடுகளின் வெளியே மரம் வளர்ப்பு திட்டம், காலநிலை மாற்றத்தைத் தணிக்க வேளாண் காடுகளின் பங்கு, வேளாண் காடுகளில் பயன்படுத்தப்படும் முக்கிய மர இனங்கள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் பேசினர்.

