/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'காலி பணியிடங்கள் நிரப்பினால் நெல் விதை உற்பத்தி அதிகரிக்கும்'
/
'காலி பணியிடங்கள் நிரப்பினால் நெல் விதை உற்பத்தி அதிகரிக்கும்'
'காலி பணியிடங்கள் நிரப்பினால் நெல் விதை உற்பத்தி அதிகரிக்கும்'
'காலி பணியிடங்கள் நிரப்பினால் நெல் விதை உற்பத்தி அதிகரிக்கும்'
ADDED : ஆக 23, 2024 01:28 AM
கோவை;துடியலுார் கூட்டுறவு விவசாய சேவா ஸ்தாபனத்தில் (டியூகாஸ்), காலிப்பணியிடங்களை நிரப்பினால், கூடுதலாக நெல் விதைகள் உற்பத்தி மேற்கொள்ள முடியும்.
கோவை, துடியலுார் கூட்டுறவு விவசாய சேவா ஸ்தாபனத்தில், 1977ல், விதைப்பிரிவு துவங்கப்பட்டது. தற்போது, ஐ.ஆர். 20, வெள்ளை பொன்னி, ஆந்திர பொன்னி, ஏ.டி.டி., 37, கோ -51 ரக நெல் விதைகள், தேர்வு செய்யப்பட்ட விவசாயிகள் வாயிலாக உற்பத்தி செய்யப்பட்டு, சான்று அளிக்கப்பட்ட விதைகள், தேவைக்கேற்ப, கூட்டுறவு விற்பனை சங்கங்கள் வாயிலாக, விவசாயிகளுக்கு வினியோகிக்கப்படுகிறது.
கடந்த 2015க்கு முன், 1,000 டன் நெல் விதைகள் உற்பத்தி மேற்கொள்ளப்பட்ட நிலையில், சில ஆண்டுகளாக, 330 டன், 220 டன் என நெல் விதைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
தொழில்நுட்பட அலுவர், கள அலுவலர், தொழில்நுட்ப அலுவலர்கள் ஓய்வுக்கு பின், இப்பணியிடங்கள நிரப்பப்படாததால், போதிய அளவில் நெல் விதைகள் உற்பத்தி செய்ய முடியவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால், பல்வேறு மாவட்டங்களில் உள்ள விவசாயிகளின் தேவைக்கு ஏற்ப, போதியளவு நெல் விதைகளை வினியோகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, காலிப்பணியிடங்களை நிரப்பினால், நெல் விதைகள் உற்பத்தியை இன்னும் கூடுதலாக்க முடியும்.

