/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாமாயில் ஸ்டாக் இல்லை! ரேஷன் கார்டுதாரர் ஏமாற்றம்
/
பாமாயில் ஸ்டாக் இல்லை! ரேஷன் கார்டுதாரர் ஏமாற்றம்
ADDED : செப் 17, 2024 10:18 PM
அன்னுார் : அன்னுார் நகரில் ரேஷன் கடைகளில், பாமாயில் வழங்கப்படவில்லை.
அன்னூர் தாலுகாவில், பகுதி நேரம் மற்றும் முழு நேரமாக, 68 ரேஷன் கடைகள் செயல்படுகின்றன. ரேஷன் கடைகளில், ரேஷன் கார்டுதாரர்களுக்கு, அரிசி மற்றும் சர்க்கரை பிரச்னை இல்லாமல் ஒவ்வொரு மாதமும் வழங்கப்படுகிறது.
துவரம் பருப்பு மற்றும் பாமாயில் கடந்த சில மாதங்களாக தாமதமாக வருவோருக்கு வழங்கப்படுவதில்லை.
கடந்த ஒரு வாரமாக, அன்னுார் நகரில் உள்ள ரேஷன் கடைகளில், 'பாமாயில் ஸ்டாக் இல்லை. வந்தால் தகவல் சொல்கிறோம்' என்று ரேஷன் கடை ஊழியர்கள், பொதுமக்களை திருப்பி அனுப்புகின்றனர்.
இது குறித்து அ.மு.காலனி மக்கள் கூறுகையில், 'கடந்த 10ம் தேதி வரை வந்தரேஷன் கார்டுதாரர்களுக்கு பாமாயில் வழங்கி உள்ளனர். ஆனால் அதன் பிறகு வருவோருக்கு பாமாயில் ஸ்டாக் இல்லை என்று கூறுகின்றனர். வெளிச்சந்தையில் பாமாயில் ஒரு லிட்டர் 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
ரேஷன் கடையில் 25 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. குறைந்த விலையில் கிடைத்ததால் மிகவும் உதவியாக இருந்தது. ஆனால், தற்போது ஸ்டாக் இல்லை என்று கூறுகின்றனர்' என்றனர்.