/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
80 சதவீதம் வரி வசூலித்து அசத்திய ஊராட்சிகள்
/
80 சதவீதம் வரி வசூலித்து அசத்திய ஊராட்சிகள்
ADDED : மார் 01, 2025 05:45 AM
அன்னுார்; அன்னுார் ஊராட்சி ஒன்றியத்தில், 21 ஊராட்சிகளில், சொத்துவரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, லைசென்ஸ் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு வரி இனங்கள் வசூல் கடந்த ஒரு மாதமாக தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஊராட்சி செயலர், துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்டோர் வீடு வீடாகச் சென்று, வரி வசூல் செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் பசூர் ஊராட்சியில், வட்டார வளர்ச்சி அலுவலர் ரவீந்திரன் மற்றும் அலுவலர்கள் தீவிர வரி வசூலை ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், 'அன்னுார் ஒன்றியத்தில், பசூர் மற்றும் பிள்ளையப்பம்பாளையம் ஊராட்சிகளில் 80 சதவீதத்துக்கு மேல் வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. மற்ற ஊராட்சிகள் 50 சதவீதத்தை தாண்டி விட்டன.
பொதுமக்கள் அனைத்து வரி இனங்களையும் செலுத்தி தங்கள் ஊராட்சிகளில் வளர்ச்சிப் பணி தடையில்லாமல் நடக்க ஒத்துழைக்க வேண்டும்,' என்றனர்.