ADDED : மார் 04, 2025 10:29 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிணத்துக்கடவு:
கிணத்துக்கடவு ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சிகளில், வரும் 10 தேதிக்குள் வீட்டு வரி மற்றும் குடிநீர் கட்டணம் செலுத்த வேண்டும், என, வட்டார வளர்ச்சி அலுவலர் தெரிவித்துள்ளனர்.
கிணத்துக்கடவு ஒன்றியத்தில், 34 கிராம ஊராட்சிகள் உள்ளது. இதில், குடிநீர் கட்டணம், வீட்டு வரி, தொழில் வரி, லைசென்ஸ் கட்டணம் உள்ளிட்டவைகளை ஆண்டு தோறும் ஊராட்சி அலுவலகத்தில் வசூல் செய்யப்பட்டு வருகிறது.
இம்மாதம் 10ம் தேதிக்குள், மக்கள் அனைவரும் குடிநீர் கட்டணம் உள்ளிட்டவைகளை அந்தந்த பகுதி ஊராட்சி அலுவலகத்தில் செலுத்த வேண்டும், என, வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) விஜய்குமார் தெரிவித்துள்ளார்.