/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மறுமுத்திரை இடாமல் தராசு பயன்பாடு அளவு குறைவால் மக்கள் பாதிப்பு
/
மறுமுத்திரை இடாமல் தராசு பயன்பாடு அளவு குறைவால் மக்கள் பாதிப்பு
மறுமுத்திரை இடாமல் தராசு பயன்பாடு அளவு குறைவால் மக்கள் பாதிப்பு
மறுமுத்திரை இடாமல் தராசு பயன்பாடு அளவு குறைவால் மக்கள் பாதிப்பு
ADDED : மே 31, 2024 12:07 AM
பொள்ளாச்சி;பொள்ளாச்சி நகரில், வணிகர்கள் பலர், தங்கள் பயன்படுத்தும் எடை கருவிகளை, குறிப்பிட்ட இடைவெளியில், மறு முத்திரையிடாமல், பொருட்களை விற்பதால் மக்கள் பாதிக்கின்றனர்.
பொள்ளாச்சி நகரில், அதிகப்படியான வணிகக் கடைகள் உள்ளன. பொருட்களின் எடை அளவை சரிபார்க்க, பெரும்பாலான கடைகளில் எலக்ட்ரானிக் தராசுகள் உள்ளன.
ஆனால், சில கடைகளில், இவ்வகை தராசில் முறைகேடுகள் செய்து அளவீடுகளை குறைத்து வழங்குவதாக புகார் எழுந்துள்ளது.
ஒரு கிலோ பழங்கள் அல்லது காய்கறிகள் கோரும் நுகர்வோருக்கு, எடை அளவு செய்யும் போது, தராசில் உள்ள திரையில், அதன் அளவு சரியாக காட்டப்படுகிறது. அப்பொருளை, வேறோரு தராசில் எடையிடும் போது, எடையளவு குறைந்தே காணப்படுகிறது.
பெரும்பாலானவர்கள் நம்பிக்கை அடிப்படையில் தராசில் நிறுத்தி தரும் பொருட்களின் எடையை, மறு அளவு செய்து சோதனையிடுவது கிடையாது.
குறிப்பிட்ட கால அவகாசத்தில் தராசுகள், தொழிலாளர் நலத்துறையினரால், சோதனை செய்யப்பட்டு, மறு முத்திரையிட்டு, சான்று பெறப்பட வேண்டும். இந்த நடைமுறையை பின்பற்றாமலும், பலர் தராசுகளை பயன்படுத்தி வருகின்றனர்.
இதனால், நியாயமாக வர்த்தகம் செய்யும் வியாபாரிகளும், மக்களின் சந்தேக பார்வைக்கு ஆளாகி வருகின்றனர்.
தன்னார்வலர்கள் கூறியதாவது:
வணிகர்கள், தங்கள் பயன்படுத்தும் எடை கருவிகளை, குறிப்பிட்ட இடைவெளியில், மறு முத்திரையிட்டு, மறு முத்திரை சான்று பெற்று, பொதுமக்கள் பார்வைக்கு தெரியும்படி வைக்க வேண்டும்.
வணிகர்கள், முத்திரை சான்றை, மக்கள் பார்வைக்கு வைக்காவிட்டாலும், உரிய காலத்திற்குள் மறு முத்திரையிடாமல் இருந்தாலும், அபராதம் விதிக்க வேண்டும். ஆனால், பெரும்பாலானவர்கள் இத்தகைய விதிகளைப் பின்பற்றால், அலட்சியப் போக்குடன் செயல்படுகின்றனர். இதற்கு, துறை ரீதியான அதிகாரிகள், ஆய்வு நடத்தாமல் இருப்பதே காரணமாகும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.