/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வீடுகளில் படியும் காஸ்டிங் துகள்கள் ; உடல் உபாதையால் மக்கள் அச்சம்
/
வீடுகளில் படியும் காஸ்டிங் துகள்கள் ; உடல் உபாதையால் மக்கள் அச்சம்
வீடுகளில் படியும் காஸ்டிங் துகள்கள் ; உடல் உபாதையால் மக்கள் அச்சம்
வீடுகளில் படியும் காஸ்டிங் துகள்கள் ; உடல் உபாதையால் மக்கள் அச்சம்
ADDED : ஆக 29, 2024 12:33 AM

சூலுார் : செல்லப்பம்பாளையம் பகுதியில் வீடுகளில் படியும் காஸ்டிங் துகள்களால், உடல் உபாதைகள் ஏற்படுவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
சூலுார் ஒன்றியம் கணியூர் ஊராட்சிக்கு உட்பட்ட செல்லப்பம்பாளையம் - பொன்னாண்டாம்பாளையம் ரோட்டில் பவுண்டரி உள்ளிட்ட பல தொழிற்சாலைகள் செயல்படுகின்றன. அருகில் தோட்டத்து சாளைகளும் உள்ளன. பவுண்டரிகளில் இருந்து காற்றில் வரும் கருந்துகள்கள் வீடுகளில் படிந்து வருவதால், அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இதுகுறித்து, ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்ட மக்கள், மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கும் மனு அளித்துள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:
எங்கள் பகுதியில் ஆடு, மாடுகள் வளர்த்தும், விவசாயமும் செய்து வருகிறோம். பல ஏக்கர் விவசாய நிலங்கள் சுற்றிலும் உள்ளது. பொன்னாண்டாம்பாளையம் - செல்லப்பம்பாளையம் ரோட்டில், 500 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கும் அரசு உயர்நிலைப்பள்ளியும் உள்ளது.
இந்த ரோட்டில் உள்ள தனியார் பவுண்டரிகள், 24 மணி நேரமும் செயல்படுகின்றன. அங்கிருந்து வெளியேறும் அதிக நச்சுத்தன்மை உள்ள கரும்புகை மற்றும் காஸ்டிங் துகள்கள், வீடுகளில், விளைநிலங்களில் படிந்து விடுகிறது. இதனால், சுற்றுச்சூழல் சீர்கேடு அடைந்துள்ளது.
சுவாசக் கோளாறு, கண்களில் எரிச்சல், உடலில் அரிப்பு ஏற்படுவதால் அச்சமாக உள்ளது. ஆடு, மாடுகளுக்கான தீவனம் பயிர்கள் மற்றும் தண்ணீரில் கருந்துகள்கள் படிவதால் கால்நடைகள் தீவனங்களை உண்பதில்லை. மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து சென்றனர். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. மீண்டும் அதே நிலை நீடிக்கிறது. மாவட்ட நிர்வாகம் இப்பிரச்னைக்கு உரிய தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

