/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சாலையில் வழிந்தோடும் கழிவுநீர் துர்நாற்றத்தால் மக்கள் அதிருப்தி
/
சாலையில் வழிந்தோடும் கழிவுநீர் துர்நாற்றத்தால் மக்கள் அதிருப்தி
சாலையில் வழிந்தோடும் கழிவுநீர் துர்நாற்றத்தால் மக்கள் அதிருப்தி
சாலையில் வழிந்தோடும் கழிவுநீர் துர்நாற்றத்தால் மக்கள் அதிருப்தி
ADDED : ஆக 06, 2024 09:56 PM

பொள்ளாச்சி : பொள்ளாச்சி அரசுப்பள்ளி அருகே செல்லும் இணைப்புச் சாலையில், வழிந்தோடும் கழிவுநீரால் கடும் துர்நாற்றம் நிலவுகிறது. இதனால், அவ்வழியாக செல்வோர், பள்ளி மாணவர்கள் அவதிப்படுகின்றனர்.
பொள்ளாச்சி சத்திரம் வீதியில் இருந்து, கோட்டூர் ரோட்டை இணைக்கும் இணைப்புச்சாலை, கோட்டூர் ரோடு நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி வழியாக செல்கிறது. இப்பகுதியில் செயல்படும் நகராட்சி தொடக்கப்பள்ளி அருகே, பொதுக்கழிப்பிடமும் உள்ளது.
இந்நிலையில், பள்ளி அருகே ரோட்டின் நடுவே, கழிவுநீர் செல்வதால் கடும் துர்நாற்றம் நிலவுகிறது.
பொதுமக்கள் கூறியதாவது:
கோட்டூர் ரோடு பள்ளி அருகே, பொதுக்கழிப்பிடம் செயல்படுகிறது. கழிப்பிடத்தில் உள்ள செப்டிக் டேங்க் குழியில் இருந்து வெளியேறும் கழிவு நீர் ரோட்டில் செல்கிறது.
கடும் துர்நாற்றம் நிலவுவதுடன், சுகாதாரம் பாதித்துள்ளது. வாகனங்கள் வேகமாக செல்லும் போது, பள்ளிக்கு செல்லும் குழந்தைகளின் சீருடைகளில் கழிவுநீர் தெறிக்கிறது. வாகனங்களில் செல்வோர், பொதுமக்கள் மூக்கை பிடித்துச் செல்லும் அவல நிலை நீடிக்கிறது.
பல முறை புகார் செய்தும், கழிவுநீர் பிரச்னைக்கு அதிகாரிகள் தீர்வு காணவில்லை. இதனால், நோய் பரப்பும் இடமாக மாறியுள்ளது. இங்குள்ள கழிப்பிடத்துக்கு வசூலிக்கப்படும் கட்டண தொகையை பயன்படுத்தியாவது, இந்த பிரச்னைக்கு தீர்வு காணலாம்.
ஆனால், நகராட்சி அதிகாரிகள் அலட்சியம் காட்டுவது வேதனையாக உள்ளது. அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் சுகாதாரத்தை பாதுகாக்கவும், இவ்வழியாக செல்வோர் நிம்மதியாக செல்லவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.