/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தொடர்ந்து இரு நாட்களாக மழை வெப்பம் தணிந்து மக்கள் மகிழ்ச்சி
/
தொடர்ந்து இரு நாட்களாக மழை வெப்பம் தணிந்து மக்கள் மகிழ்ச்சி
தொடர்ந்து இரு நாட்களாக மழை வெப்பம் தணிந்து மக்கள் மகிழ்ச்சி
தொடர்ந்து இரு நாட்களாக மழை வெப்பம் தணிந்து மக்கள் மகிழ்ச்சி
ADDED : மே 12, 2024 11:24 PM

பொள்ளாச்சி;பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், இரண்டு நாட்களாக மழை பெய்ததால், மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், கடுமையான வெயிலின் தாக்கத்தால் கடந்த, மூன்று மாதங்களுக்கும் மேலாக மக்கள் மிகுந்த சிரமப்பட்டனர்.கடும் வெப்ப அலையால் வெளியே செல்வதை தவிர்க்கும் நிலை காணப்பட்டது.
கோடை வெப்பத்தை தாங்க முடியாமல் இளநீர், நுங்கு, தர்பூசணி போன்றவை சாப்பிட்டு தாகத்தை தணித்துக்கொண்டனர்.
இந்நிலையில், கடந்த, 9ம் தேதி ஒரு மணி நேரத்துக்கு மேலாக மழை பெய்தது; 10ம் தேதி லேசான மழை பெய்த நிலையில், நேற்றுமுன்தினம் மாலையில், இடைவிடாமல் மழைப்பொழிந்தது.
நேற்று மதியமும் சில மணி நேரம் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். நகரப்பகுதியில் பெரிதளவு எவ்வித பாதிப்பும் இல்லாத நிலையில், ராமகிருஷ்ணாபுரம் வீதியில் மரக்கிளை மட்டும் பெயர்ந்து விழுந்தது.
தடுப்பணை நிரம்பியது
கோபால்சாமி மலை வனப்பகுதியில் உள்ள தடுப்பணை, வறட்சியால் வறண்டு காணப்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் தடுப்பணை நிரம்பியுள்ளது.
இதனால், வனவிலங்குகளுக்கு பயனாக இருக்கும் என இயற்கை ஆர்வலர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். இந்த மழை தொடர்ந்து பெய்து, அணைகள் நிரம்பினால் பயனாக இருக்கும் என விவசாயிகளிடம் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மழையளவு (மி.மீ.,)
சோலையாறு, 2, பரம்பிக்குளம், 4, ஆழியாறு, 24, வால்பாறை, 33, மேல் நீராறு, 9, கீழ் நீராறு, 5, காடம்பாறை, 5, மணக்கடவு, 18, துாணக்கடவு, 12, பெருவாரிப்பள்ளம், 10, மேல் ஆழியாறு, 6, நவமலை,3, பொள்ளாச்சி, 56, நல்லாறு, 43 என மழையளவு பதிவாகியது.