/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தபால் சேமிப்பு கணக்கு துவக்க மக்கள் ஆர்வம்
/
தபால் சேமிப்பு கணக்கு துவக்க மக்கள் ஆர்வம்
ADDED : செப் 10, 2024 02:18 AM
பொள்ளாச்சி;பொள்ளாச்சி கிராமப்புற மக்கள், தபால் அலுவலகங்களிலேயே சேமிப்பு கணக்கு துவக்க ஆர்வம் காட்டுவதாக தபால் அலுவலர்கள் தெரிவித்தனர்.
பொள்ளாச்சி தபால் கோட்டத்தில், தலைமை தபால் அலுவலகம் உட்பட மொத்தம், 217 தபால் அலுவலகங்கள் உள்ளன. அவற்றில், 164 கிளை தபால் அலுவலகங்கள், கிராமப்புறங்களில் செயல்படுகிறது. கிளை தபால் நிலையங்களில் அனைத்து பரிவர்த்தனைகளையும் டிஜிட்டல் முறையில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனால், கிராம மக்கள் சேமிப்பு கணக்கு துவங்க, வங்கிக்கு மாறாக, தபால் அலுவலகங்களையே தேர்வு செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தபால் அலுவலர்கள் கூறியதாவது:
கிளை தபால் அலுவலகங்களிலும் விரைவு தபால் புக்கிங், மணியார்டர் புக்கிங், பாலிசி பிரீமியம் தொகை செலுத்துதல், முதிர்வு தொகை கோருதல், சேமிப்பு வங்கி பரிவர்த்தனை உள்ளிட்ட சேவைகளை பெற முடியும்.
மேலும், வங்கிகளை போலவே ஏ.டி.எம்., ஆன்லைன் பரிவர்த்தனை உள்ளிட்ட பல சேவைகள் செயல்பாட்டில் உள்ளதால், ஆண்டுதோறும் தபால் அலுவலகங்களில் சேமிப்பு கணக்கு துவங்குவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
சேமிப்பு கணக்கு துவங்க, குறைந்தபட்ச வைப்பு தொகையாக, 500 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதே காரணமாகும்.
இவ்வாறு, கூறினர்.