/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாதியில் நிற்கும் கட்டமைப்பு பணி விரைவுபடுத்த மக்கள் வலியுறுத்தல்
/
பாதியில் நிற்கும் கட்டமைப்பு பணி விரைவுபடுத்த மக்கள் வலியுறுத்தல்
பாதியில் நிற்கும் கட்டமைப்பு பணி விரைவுபடுத்த மக்கள் வலியுறுத்தல்
பாதியில் நிற்கும் கட்டமைப்பு பணி விரைவுபடுத்த மக்கள் வலியுறுத்தல்
ADDED : ஜூன் 13, 2024 11:15 PM
உடுமலை : உடுமலை ஒன்றியத்துக்குட்பட்ட கிராம ஊராட்சிகளில், பாதியில் நிற்கும் அடிப்படை கட்டமைப்பு பணிகளை விரைவுபடுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது.
உடுமலை ஒன்றியத்தில், 38 ஊராட்சிகள் உள்ளன. மத்திய மற்றும் மாநில அரசின் சார்பில், பல்வேறு நலத்திட்டங்கள் கிராமங்களில் செயல்படுத்தப்படுகிறது.
லோக்சபா தேர்தலுக்கு முன், பல கிராமங்களில், 15வது மானியகுழு நிதியிலிருந்து ரோடு போடும் பணிகள், வடிகால் அமைப்பது உட்பட கிராமங்களின் மேம்பாட்டு பணிகள் துவக்கப்பட்டன.
அரசின் கட்டமைப்பு பணிகளுக்கு, தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்கள் பயன்படுத்தப்படுகின்றனர்.
புதிய நிதியாண்டு துவங்கியும் தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் இருந்ததால், வேலை உறுதி பணியாளர்களும் அதிக எண்ணிக்கையில் இல்லை.
இதனால், பல ஊராட்சிகளில் பணிகள் பாதியுடன் அரைகுறையான நிலையில், நீண்ட நாட்களாக நிறுத்தப்பட்டது.
தேர்தல் நிறைவடைந்தும், இப்பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படாமல் உள்ளது. கிராமங்களில் பாதியில் நிற்கும் ரோடுபணிகளை விரைவில் முடிப்பதற்கும், வடிகால் அமைத்தல், குழாய் பதித்தல் பணிகளையும் தீவிரப்படுத்த, ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

