/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சாலக்குடி வழியாக திருச்சூருக்கு பஸ் இயக்க மக்கள் கோரிக்கை
/
சாலக்குடி வழியாக திருச்சூருக்கு பஸ் இயக்க மக்கள் கோரிக்கை
சாலக்குடி வழியாக திருச்சூருக்கு பஸ் இயக்க மக்கள் கோரிக்கை
சாலக்குடி வழியாக திருச்சூருக்கு பஸ் இயக்க மக்கள் கோரிக்கை
ADDED : செப் 02, 2024 02:03 AM
வால்பாறை;வால்பாறையிலிருந்து சாலக்குடி வழியாக திருச்சூருக்கு அரசு பஸ் இயக்க வேண்டும் என இருமாநில மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வால்பாறையில் இருந்து இரண்டு தனியார் பஸ்கள் மளுக்கப்பாறை, அதிரபள்ளி நீர்வீழ்ச்சி வழியாக சாலக்குடிக்கு இயக்கப்படுகிறது.சாலக்குடியிலிருந்து, மளுக்கப்பாறை எஸ்டேட் வரை ஐந்து அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில் வால்பாறை அரசு போக்குவரத்துக்கழகத்தின் சார்பில், கடந்த, 2013 வரை அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி வழியாக சாலக்குடிக்கு பஸ் இயக்கபட்டது. இதனால் இருமாநில பயணியரும் பயனடைந்தனர்.
கலெக்சன் குறைவை காரணம் காட்டி நிறுத்தப்பட்ட அரசு பஸ், கடந்த, 2022ம் ஆண்டு ஒரு வாரம் மட்டும் இயக்கப்பட்டது. அதன்பின் பஸ் இந்த வழித்தடத்தில் இயக்கப்படவில்லை.
மக்கள் கூறியதாவது:
வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணியர் அதிக அளவில் சாலக்குடி செல்லும் வழியில் உள்ள அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிக்கு செல்கின்றனர். பல ஆண்டுகளாக சாலக்குடிக்கு இயக்கப்பட்டு வந்த அரசு பஸ் திடீரென நிறுத்தப்பட்டதால், பயணியர் தனியார் பஸ்களில் பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது.
கேரள மாநிலம் திருச்சூர் செல்ல, வால்பாறையிலிருந்து பொள்ளாச்சி சென்று, பயணிக்க வேண்டியுள்ளது. இதனால், பயண நேரமும் அதிகமாக உள்ளது. எனவே இருமாநில மக்கள் மற்றும் சுற்றுலா பயணியர் நலன் கருதி வால்பாறை அரசு போக்குவரத்துக்கழகத்தின் சார்பில், சாலக்குடி வழியாக திருச்சூர் வரை தினமும் பஸ் இயக்க வேண்டும். இவ்வாறு, கூறினர்.