/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தென்னையில் பூச்சி மேலாண்மை பயிற்சி
/
தென்னையில் பூச்சி மேலாண்மை பயிற்சி
ADDED : ஆக 03, 2024 05:33 AM
மேட்டுப்பாளையம்: தமிழக அரசின், வேளாண்மை துறை அட்மா திட்டம் வாயிலாக, காரமடை வட்டாரத்திற்குட்பட்ட தேக்கம்பட்டி கிராமத்தில், விவசாயிகளுக்கு தென்னையில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை செயல் விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்த பயிற்சி, காரமடை வேளாண்மை உதவி இயக்குனர் பாக்யலட்சுமி தலைமையில் நடைபெற்றது. பயிற்சியில், தென்னையில் வரக்கூடிய முக்கிய பூச்சியான சிவப்பு கூன் வண்டு, காண்டாமிருக வண்டு, ரூகோஸ் வெள்ளை ஈ, இவற்றை இனக்கவர்ச்சி பொறி மற்றும் மஞ்சள் வண்ண ஒட்டு பசை தாள் பயன்படுத்தி, எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என்று செயல் விளக்கம் விவசாயிகளுக்கு காண்பிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் வேளாண்மை அலுவலர் பாலகிருஷ்ணன், அட்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் டி.தினேஷ்குமார் மற்றும் ஆர். தினேஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.--