/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பணி நிரந்தரம் செய்யக்கோரி பகுதிநேர ஆசிரியர்கள் மனு
/
பணி நிரந்தரம் செய்யக்கோரி பகுதிநேர ஆசிரியர்கள் மனு
பணி நிரந்தரம் செய்யக்கோரி பகுதிநேர ஆசிரியர்கள் மனு
பணி நிரந்தரம் செய்யக்கோரி பகுதிநேர ஆசிரியர்கள் மனு
ADDED : ஆக 18, 2024 10:50 PM
கோவை:''கடந்த இரண்டு தேர்தல்களிலும் தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கையில், பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வதாக வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால் இதுவரை செய்யவில்லை,'' என, பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் கூறினார்.
இது குறித்து, அவர் கூறியதாவது:
அரசு பள்ளிகளில், 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் உடற்கல்வி, ஓவியம், கணினி, தையல், இசை, தோட்டக்கலை, கட்டடக்கலை, வாழ்வியல் திறன் உள்ளிட்ட பாடங்களை 13 ஆண்டுகளாக நடத்தி வருகிறோம்.
தற்போது 12 ஆயிரத்து 500 ரூபாய் தொகுப்பூதியம் வழங்கப்படுகிறது. குறைந்த சம்பளத்தை வைத்து, குடும்பம் நடத்த முடியவில்லை. பகுதிநேர ஆசிரியர்களுக்கு காலமுறை சம்பளம் வழங்கி, பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என, தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
கடந்த இரண்டு தேர்தல்களிலும் ஆளும் தி.மு.க.,அரசு தனது தேர்தல் அறிக்கையில், பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வதாக, வாக்குறுதி அளித்தது. இதுவரை செய்யவில்லை.
எதிர் கட்சியாக இருந்த போது, தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் சட்டமன்றத்தில் பகுதி நேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்யவேண்டும் என பேசினர்.
ஆட்சிக்கு வந்த பிறகு அதை மறந்து விட்டனர். எங்கள் கோரிக்கையை, தமிழக முதல்வர் கருணையுடன் பரிசீலனை செய்ய வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.