/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவிலுக்கு வழி கோரி மத்திய அமைச்சரிடம் மனு
/
கோவிலுக்கு வழி கோரி மத்திய அமைச்சரிடம் மனு
ADDED : மார் 09, 2025 11:26 PM

சோமனுார்; கோவிலுக்கு வழி விட்டு பணிகள் செய்யக்கோரி, மத்திய இணை அமைச்சரிடம், கிராம மக்கள் மனு அளித்தனர்.
சோமனுார் அடுத்த ராமாச்சியம் பாளையத்தில் உள்ள மாகாளியம்மன் கோவிலுக்கு செல்லும் வழியில், ரயில்வே துறை சார்பில் தடுப்புகள் அமைக்கும் பணி நடக்கிறது. இதனால், கோவிலுக்கு செல்ல பாதை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ஊர் பொதுமக்கள், கோவில் அறங்காவலர் குழுவினர், ஸ்ரீ அம்மன் அறக்கட்டளை மற்றும் பா.ஜ., சார்பில், மத்திய இணை அமைச்சர் முருகனிடம் மனு அளிக்கப்பட்டது.
ஊர் மக்கள் கூறுகையில், 'கோவிலுக்கும் செல்லும் பாதையை பல ஆண்டுகளாக பயன்படுத்தி வருகிறோம். பாதுகாப்பு காரணங்களுக்காக, ரயில்வே துறை பாதையில் இரும்பு தடுப்புகளை அமைத்து வருகின்றனர். அதனால், கோவிலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்படும். கோவிலுக்கு செல்ல வழி விட்டு பணிகளை செய்ய நடவடிக்கை எடுக்க கோரி, மத்திய அமைச்சர் முருகனிடம் மனு அளித்துள்ளோம். அவர் உரிய நடவடிக்கைக்கு பரிந்துரைப்பதாக கூறியுள்ளார்,' என்றனர்.