/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'மக்களுடன் முதல்வர்' முகாம் கோரிக்கை மனுக்கள் குவிந்தன
/
'மக்களுடன் முதல்வர்' முகாம் கோரிக்கை மனுக்கள் குவிந்தன
'மக்களுடன் முதல்வர்' முகாம் கோரிக்கை மனுக்கள் குவிந்தன
'மக்களுடன் முதல்வர்' முகாம் கோரிக்கை மனுக்கள் குவிந்தன
ADDED : ஜூலை 29, 2024 02:50 AM

மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையத்தில் நடந்த, நான்கு ஊராட்சிகளுக்கான, மக்களுடன் முதல்வர் முகாமில், 1,200க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்கள் குவிந்தன.
காரமடை ஊராட்சி ஒன்றியத்தில், ஓடந்துறை, நெல்லித்துறை, தேக்கம்பட்டி, சிக்கதாசம்பாளையம் ஆகிய நான்கு ஊராட்சிகளுக்கு, மக்களுடன் முதல்வர் முகாம், மேட்டுப்பாளையம் நஞ்சையா லிங்கம்மாள் திருமண மண்டபத்தில் நடந்தது.
கோவை மாவட்ட துணை கலெக்டர் நிறைமதி முகாமை துவக்கி வைத்தார். மேட்டுப்பாளையம் தாசில்தார் வாசுதேவன் வரவேற்றார். ஓடந்துறை ஊராட்சி தலைவர் தங்கவேல், சிக்கதாசம்பாளையம் தலைவர் விமலா, தேக்கம்பட்டி தலைவர் நித்யா நந்தகுமார், நெல்லித்துறை தலைவர் செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில், 15 அரசு துறையைச் சேர்ந்த அலுவலர்கள் பங்கேற்று, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றனர். மொத்தம், 1,200க்கும் மேற்பட்ட மக்கள் கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். இதில் உரிமைத் தொகை, முதியோர் உதவி தொகை, இலவச வீட்டு மனை பட்டா, தொகுப்பு வீடுகளை பழுது நீக்கம் செய்ய வேண்டுதல் ஆகிய கோரிக்கை மனுக்களை, பொதுமக்கள் அதிகளவில் கொடுத்திருந்தனர். காரமடை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்திரா, மகேஸ்வரி உள்பட பலர் பங்கேற்றனர்.