/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பில்லுார் - 3 குடிநீர் திட்டத்தில் சோதனை ஓட்டம்; கமிஷனர் ஆய்வு
/
பில்லுார் - 3 குடிநீர் திட்டத்தில் சோதனை ஓட்டம்; கமிஷனர் ஆய்வு
பில்லுார் - 3 குடிநீர் திட்டத்தில் சோதனை ஓட்டம்; கமிஷனர் ஆய்வு
பில்லுார் - 3 குடிநீர் திட்டத்தில் சோதனை ஓட்டம்; கமிஷனர் ஆய்வு
ADDED : ஜூலை 04, 2024 05:12 AM
கோவை : பில்லுார் - 3 குடிநீர் திட்டத்தின் வாயிலாக, குடிநீர் வினியோகம் செய்வதை முறைப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், பல்வேறு குடிநீர் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இருப்பினும், மக்கள்தொகை பெருக்கத்தால், குடிநீர் தட்டுப்பாடு தொடர்கிறது. இதைக்கருத்தில் கொண்டு பில்லுார் - 3 குடிநீர் திட்டம் செயல்படுத்த திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் நடந்து வருகின்றன.
இதன்படி, கோவை மாநகராட்சி பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக, ரூ.779 கோடி மதிப்பில், பவானி ஆற்றை நீராதாரமாக கொண்டு, பில்லுார்,-3 குடிநீர் திட்டம் தயாரிக்கப்பட்டது.
மேட்டுப்பாளையம், நெல்லித்துறை ஊராட்சி, முருகையன் பரிசல் துறை பகுதியில், ரூ.134 கோடி மதிப்பில், தலைமை நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
அங்கிருந்து, 16 கி.மீ., துாரத்தில் உள்ள மருதுாருக்கு குடிநீர் 'பம்பிங்' செய்யப்படுகிறது. மருதுார் ஊராட்சி, தண்டிப்பெருமாள்புரத்தில், ரூ.104.90 கோடியில் அமைக்கப்பட்ட, 17.8 கோடி லிட்டர் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து, 16 கி.மீ., துாரத்தில் கட்டன் மலைக்கு தண்ணீர் செல்கிறது.
கட்டன் மலையில் இருந்து, ரூ.62 கோடி செலவில், 900 மீட்டர் துார சுரங்கப்பணி முடிந்துள்ளது. அங்கிருந்து, பன்னிமடைக்கு குடிநீர் கொண்டுவரப்பட்டு, மாநகராட்சி பகுதிக்கு வினியோகிக்கப்படவுள்ளது. இதன்படி, பல்வேறு வார்டுகளிலும், குடிநீர் தேக்கத் தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன.
இக்குடிநீர் தொட்டிகளில் இருந்து, கோவை மாநகராட்சி கவுண்டம்பாளையம், வடவள்ளி, வீரகேரளம், குடிநீர் திட்டத்தின் வாயிலாக வீடுகளுக்கு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த இணைப்புகளின் வாயிலாக, குடிநீர் வினியோக சோதனை ஓட்டம் நேற்று நடந்தது. மாநகராட்சி கமிஷனர் ஆய்வு செய்தார்.
மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'பில்லுார், 3 திட்டத்தின் கீழ், ஒவ்வொரு கட்டமாக குடிநீர் வழங்குவது, நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாகவே சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது' என்றனர்.