/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போதை பொருளுக்கு எதிராக உறுதிமொழி
/
போதை பொருளுக்கு எதிராக உறுதிமொழி
ADDED : ஆக 12, 2024 11:07 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை:மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில், போதை பொருள் பழக்கத்துக்கு எதிராக போலீசார் நேற்று உறுதிமொழி ஏற்றனர்.
தலைமையிடத்து போலீஸ் துணை கமிஷனர் சுஹாசினி தலைமையிலான போலீசார்,'போதை பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை நான் முழுமையாக அறிவேன். நான் போதை பழக்கத்துக்கு ஆளாக மாட்டேன். எனது குடும்பத்தினரையும், நண்பர்களையும் போதை பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுத்து, அவர்களுக்கு அறிவுரை வழங்குவேன். மாநிலத்தின் வளர்ச்சிக்கும், மக்களின் நல்வாழ்விற்கும் நான் அர்ப்பணிப்புடன் பங்காற்றுவேன்' என்பன உள்ளிட்ட வாசகங்களை உறுதிமொழியாக ஏற்றனர்.

