/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பிளஸ் 2 ஆங்கில தேர்வு; கோவையில் 381 பேர் ஆப்சென்ட்
/
பிளஸ் 2 ஆங்கில தேர்வு; கோவையில் 381 பேர் ஆப்சென்ட்
பிளஸ் 2 ஆங்கில தேர்வு; கோவையில் 381 பேர் ஆப்சென்ட்
பிளஸ் 2 ஆங்கில தேர்வு; கோவையில் 381 பேர் ஆப்சென்ட்
ADDED : மார் 06, 2025 10:18 PM
கோவை; பிளஸ்2 பொதுத் தேர்வில் இரண்டாம் தாளான ஆங்கில மொழிப்பாடத்தை, 34 ஆயிரத்து, 913 பேர் நேற்று எழுதினர்.
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தின் கீழ், 10, பிளஸ்1, பிளஸ்2 வகுப்புகளுக்கு ஆண்டுதோறும் பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி, பிளஸ்2 பொதுத்தேர்வு கடந்த, 3 முதல் வரும், 25ம் தேதி வரையும், பிளஸ்1 வகுப்புக்கு கடந்த, 5 முதல், 27ம் தேதி வரையும் நடக்கிறது.
கோவை மாவட்டத்தில் பிளஸ்2 பொதுத் தேர்வை, 128 மையங்களில், 35 ஆயிரத்து, 294 மாணவர்கள் எழுதுகின்றனர். கடந்த, 3ம் தேதி தமிழ் மொழிப்பாடத்தை அடுத்து, நேற்று ஆங்கில மொழிப்பாட தேர்வு நடந்தது.
காலை, 10:00 முதல் மதியம், 1:15 மணி வரை நடந்த தேர்வை, 34 ஆயிரத்து, 913 பேர் எழுதினர்; 381 பேர் எழுதவில்லை. ஆங்கில மொழிப்பாடம் எளிதாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். வரும், 11ம் தேதி கணிதம், விலங்கியல், வணிகவியல், மைக்ரோ பயாலஜி, உணவு மற்றும் ஊட்டச்சத்து, ஜவுளி மற்றும் ஆடை வடிவமைப்பு, உணவு சேவை மேலாண்மை, வேளாண் அறிவியல், நர்சிங்(பொது) ஆகிய பாடங்களுக்கு தேர்வு நடக்கிறது.