/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மேட்டுப்பாளையத்தில் போலீசார் கொடி அணிவகுப்பு
/
மேட்டுப்பாளையத்தில் போலீசார் கொடி அணிவகுப்பு
ADDED : செப் 05, 2024 11:44 PM
மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையத்தில் விநாயகர் சதுர்த்தியை, முன்னிட்டு போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர்.
மேட்டுப்பாளையத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு, இந்து முன்னணி சார்பில் 60க்கும் மேற்பட்ட இடங்கள் மற்றும் பொது மக்கள் சார்பில் 15க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட, போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.
விநாயகர் சதுர்த்தி விழாவின் ஒரு பகுதியாக விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, பவானி ஆற்றில் கரைக்கப்படும்.
இதையடுத்து, மேட்டுப்பாளையத்தில் விநாயகர் சதுர்த்தி விழா பாதுகாப்பு ஏற்பாடுகளின் ஒருபகுதியாக நேற்று அபிராமி தியேட்டர் ஜங்கசன் இருந்து, மேட்டுப்பாளையம் போலீஸ் ஸ்டேஷன் வரை நகரின் முக்கிய வீதிகள் வழியாக, போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர்.
ரூரல் எஸ்.பி., கார்த்திகேயன், தலைமையில், மேட்டுப்பாளையம் டி.எஸ்.பி., பாலாஜி, இன்ஸ்பெக்டர் மணிகண்டன் உட்பட 250க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டனர்.