/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
துாய்மை பணியாளர் மீது தாக்குதல் நான்கு பேருக்கு போலீசார் வலை
/
துாய்மை பணியாளர் மீது தாக்குதல் நான்கு பேருக்கு போலீசார் வலை
துாய்மை பணியாளர் மீது தாக்குதல் நான்கு பேருக்கு போலீசார் வலை
துாய்மை பணியாளர் மீது தாக்குதல் நான்கு பேருக்கு போலீசார் வலை
ADDED : ஆக 20, 2024 11:54 PM
கோவை:தந்தையை தாக்கியதாகக்கூறி, துாய்மை பணியாளர் மீது தாக்குதல் நடத்திய, நான்கு பேரை போலீசார் தேடுகின்றனர்.
கணபதி, சிவசக்தி காலனியை சேர்ந்தவர் அனில்குமார், 30; துாய்மை பணியாளர். இவரது உறவினரான அம்பேத்கர், துாய்மை பணியாளராக உள்ளார்.
கடந்த, 18ம் தேதி மாலை, 5:00 மணிக்கு கணபதி, ராஜிவ் நாயுடு வீதியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையின் பின்புறம், சாக்கடையை சுத்தம் செய்யும் பணியில் அம்பேத்கர் ஈடுபட்டிருந்தார். அப்போது, முருகேசன் என்பவர் அம்பேத்கரிடம், துாய்மை பணி விஷயத்தில் வாக்குவாதம் செய்துள்ளார்.
அங்கு வந்த அனில்குமார், இருவரையும் சமாதானம் செய்து அனுப்பிவைத்துள்ளார். மாலை, 5:40 மணியளவில் அனில்குமார் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அம்பேத்கரின் மகன், மூன்று பேருடன் வந்து, 'எனது தந்தையை ஏன் தாக்கினீர்கள்' எனக்கேட்டு வாக்குவாதம் செய்துள்ளார்.
வாக்குவாதம் முற்றி நான்கு பேரும், அனில்குமாரை தாக்கியுள்ளனர். அனில்குமார் சத்தம் போட்டதும் அக்கம் பக்கத்தினர் அங்கு கூடினர். இதையடுத்து, நால்வரும் அங்கிருந்து தப்பினர்.
108 ஆம்புலன்ஸ் வாயிலாக அனில்குமார், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். புகாரின் பேரில், சரவணம்பட்டி போலீசார் நான்கு பேரையும் தேடி வருகின்றனர்.

