/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
யூ டியூபர் சவுக்கு சங்கரிடம் விசாரணை கஸ்டடி கேட்டு போலீசார் மனு
/
யூ டியூபர் சவுக்கு சங்கரிடம் விசாரணை கஸ்டடி கேட்டு போலீசார் மனு
யூ டியூபர் சவுக்கு சங்கரிடம் விசாரணை கஸ்டடி கேட்டு போலீசார் மனு
யூ டியூபர் சவுக்கு சங்கரிடம் விசாரணை கஸ்டடி கேட்டு போலீசார் மனு
ADDED : மே 07, 2024 12:35 AM
கோவை;பிரபல யூ டியூபரான சவுக்கு சங்கர், சமீபத்தில் யு டியூப் சேனல் ஒன்றுக்கு நேர்காணல் அளித்திருந்தார்.
அதில், போலீஸ் அதிகாரிகள் குறித்தும், பெண் போலீசார் குறித்தும் அவதுாறான கருத்து தெரிவித்திருந்தார்.அதை சமூக வலைதளத்தில் பார்த்த கோவை மாநகர சைபர் கிரைம் போலீஸ் எஸ்.ஐ., சுகன்யா, சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் நான்கு பிரிவுகளில் வழக்கு பதிந்தனர்.இந்நிலையில், அவர் தேனியில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து தேனியில் ஒரு தனியார் விடுதியில் தங்கியிருந்த சவுக்கு சங்கரை, கோவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.அங்கிருந்து அவரை போலீசார் வேனில் கோவை அழைத்து வந்தனர். அப்போது தாராபுரம் அருகே வந்த போது, குறுக்கே வந்த கார் மீது போலீஸ் வேன் மோதியது. இதில் லேசாக காயம் அடைந்த சவுக்கு சங்கருக்கு சிகிச்சை அளித்த பின்னர் போலீசார் அவரை கோவை அழைத்து வந்தனர். தொடர்ந்து அவரை ரகசிய இடத்தில் வைத்து, பல மணி நேரம் விசாரித்தனர். அதன்பின் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.சிறையில் அடைக்கப்பட்ட சவுக்கு சங்கரை கஸ்டடி எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதையடுத்து கோவை நீதிமன்றத்தில், போலீசார் நான்கு நாட்கள் கஸ்டடிக்கு அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளனர். இதுகுறித்து நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர உள்ளது.