ADDED : ஆக 10, 2026 07:21 PM
வால்பாறை: உரிய ஆவணங்கள் இல்லமால் சுற்றுலா பயணியரை தங்கும் விடுதிகளில் தங்குவதற்கு அனுமதிக்கூடாது என, போலீசார் எச்சரித்துள்ளனர்.
வால்பாறை தனியார் திருமண மண்டபத்தில் தங்கும்விடுதி உரிமையாளர்களுக்கான கூட்டம் இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் வால்பாறை நகரில் உள்ள தங்கும் விடுதி உரிமையாளர்கள், பணியாளர்கள் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
போலீசார் பேசியதாவது:
வால்பாறையில் தங்கும் விடுதிகளின் உரிமையாளர்களிடம் முறையான ஆவணங்கள் இருக்க வேண்டும். குற்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க அனைத்து தங்கும்விடுதிகளிலும், கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்.
உரிய ஆவணங்கள் இல்லாமல் சுற்றுலா பயணியர் தங்குவதற்கு அனுமதி கூடாது. மீறினால் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக, வெளிநாட்டில் இருந்து வரும் சுற்றுலா பயணியரை விடுதியின் தங்க வைப்பதற்கு முன் போலீசில் அனுமதி பெற வேண்டும். தங்கும் சுற்றுலா பயணியரின் விபரத்தை நாள் தோறும் போலீஸ் ஸ்டேஷனில் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.
