ADDED : ஜூன் 23, 2026 04:40 PM
வால்பாறை: வால்பாறையில் வரும் 28ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடக்கிறது.
நாடு முழுவதும் வரும், 28ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடக்கிறது. இளம் பிள்ளை வாதம் என்ற போலியோ நோயை ஒழிப்பதற்காக, ஆண்டு தோறும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, இரண்டு தவணைகளில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. இந்த ஆண்டில், வரும், 28ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடக்கிறது.
வால்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் பாபுலட்சுமணன் கூறுகையில், ‘‘வால்பாறை நகர், முடீஸ், சோலையாறுநகர் ஆகிய சுகாதார நிலையங்களில் வரும், 28ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடக்கிறது. இதற்காக வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதிகளில் மொத்தம், 106 முகாம்கள் அமைக்கப்படவுள்ளன. ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தவறாமல் சொட்டு மருந்து கொடுக்க வேண்டும்,’’ என்றனர்.
