/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கூடு கட்ட இலை, குச்சிகளுக்கு பதிலாக பாலித்தீன்! பறவை வாழ்வியல் மாற்றம் பேரழிவுக்கு அறிகுறி
/
கூடு கட்ட இலை, குச்சிகளுக்கு பதிலாக பாலித்தீன்! பறவை வாழ்வியல் மாற்றம் பேரழிவுக்கு அறிகுறி
கூடு கட்ட இலை, குச்சிகளுக்கு பதிலாக பாலித்தீன்! பறவை வாழ்வியல் மாற்றம் பேரழிவுக்கு அறிகுறி
கூடு கட்ட இலை, குச்சிகளுக்கு பதிலாக பாலித்தீன்! பறவை வாழ்வியல் மாற்றம் பேரழிவுக்கு அறிகுறி
ADDED : செப் 11, 2024 10:32 PM

பொள்ளாச்சி : இலைகளையும், சிறிய குச்சிகளையும் கூடு கட்டுவதற்கு பயன்படுத்திய பறவைகள், தற்போது பாலித்தீன் பைகளை சேகரம் செய்யும் அவலம் பொள்ளாச்சி நகரில் காண முடிந்தது.
பறவை இனங்களில், பெரும்பாலானவை கூடுகட்டி வாழ்கின்றன. அவ்வகையில், காகம், மைனா, தேன்சிட்டு உள்ளிட்ட பறவைகள், மரங்களில், குச்சிகளைப் பரண் போல அடுக்கி, நடுவில் சிறு குழியமைத்து, அதில் நார், புல், இறகு, இலை போன்றவற்றை கொண்டு கூடு கட்டுகிறது.
இதனால், அதன் முட்டைகளோ, குஞ்சுகளோ கீழே விழாமல் பாதுகாப்பாக இருக்கும். இந்த கூடுகள் அளவு, ஒவ்வொரு பறவை இனங்களுக்கு ஏற்றாற்போல், மாறுபட்டு காணப்படும்.
ஆனால், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம், ரோடு விரிவாக்கத்துக்காக மரங்கள் வெட்டி அகற்றம், பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் பைகள் பயன்பாடு காரணமாக, பறவைகளின் கூடு கட்டும் முறைகளும், வாழ்வியல் முறைகளும் தற்போது மாறியுள்ளன.
இத்தனை காலம் இலைகளையும், சிறிய குச்சிகளையும் கூடு கட்டுவதற்கு பயன்படுத்திய பறவைகள், தற்போது பாலித்தீன் பைகளை சேகரம் செய்யும் அவலம் பொள்ளாச்சி நகரில் காண முடிந்தது.
இயற்கை ஆர்வலர்கள் கூறியதாவது:
பறவைகள் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கவும், அவைகளை பாதுகாக்கவும், எதிரிகளிடமிருந்தும் மறைந்து வாழவும், சேகரித்து வரும் உணவுகளை இருப்பு வைத்து சாப்பிடவும், முட்டைகள் கீழே விழாமல் இருக்கவும் கூடுகளை அமைத்துக் கொள்கின்றன.
ஒவ்வொரு பறவையும், கட்டப்படும் கூட்டை அந்த மரத்தின் கிளை தாங்குமா, தாங்காதா என்பதை அறிந்து கொள்ளும். தற்போது, பறவைகளே கூடு கட்ட பாலித்தீன் பைகளை பயன்படுத்தும் அவலம் ஏற்பட்டுள்ளது வேதனை அளிக்கச் செய்கிறது.
இயற்கையைப் பாதுகாப்பதில் வனவிலங்குகள், பறவைகள் பெரும் பங்கு வகிக்கின்றன. அதேபோல் இயற்கையைப் பாதுகாக்க வேண்டியது நம்முடைய கடமையாகும். மரங்கள் வளர்ந்து, இயற்கையை பாதுகாக்க வேண்டும். பறவைகள் வாழ்வதற்கான பாதுகாப்பான சூழலை ஏற்படுத்த வேண்டும்.
இன்று, பறவைகளிடம் ஏற்படும் மாற்றம், இயற்கை பேரழிவுக்கான மிக்பெரிய அறிகுறியாகும். இதை உணர்ந்து, ஒவ்வொருவரும் இயற்கையை பாதுகாக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.