மறக்க முடியாத அந்நாள் மீண்டும் திரும்பிய பொன்னாள்
மறக்க முடியாத அந்நாள் மீண்டும் திரும்பிய பொன்னாள்
ADDED : ஜூலை 27, 2026 03:41 PM
மேட்டுப்பாளையம்: சிறுமுகைப்புதுார் அரசு உயர்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சந்தித்து, மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
சிறுமுகைப்புதுார் அரசு உயர்நிலைப் பள்ளியில், 1975ம் ஆண்டு, பிளஸ் 1ல் 128 மாணவ, மாணவியர் படித்தனர். 51 ஆண்டுகளுக்கு பின், இவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி, தென் திருப்பதி நால்ரோடு டி.கே.வி., மஹாலில் நடந்தது. ஜடையம்பாளையம் ஊராட்சி முன்னாள் தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார். முன்னாள் மாணவர் கஜேந்திரன் பேசுகையில், ‘‘110 பேர் குடும்பத்துடன் விழாவில் பங்கேற்றது மகிழ்ச்சியாக உள்ளது,’’ என்றார்.
சிறுமுகை ராஜேந்திரன், ராமலிங்கம், முன்னாள் தலைமை ஆசிரியர் வேலுசாமி, தலைமை ஆசிரியர் செல்லபாரத் ஆகியோர் பேசினர். 1975ல் பணியாற்றிய ஆசிரியர்கள் கந்தசாமி, கிருஷ்ணன், ஜெயலட்சுமி, சவுண்டப்பன் ஆகியோருக்கு பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கினர்.
அரசு மாற்றுத்திறனாளி பள்ளியில் உள்ள, 30 மாணவர்களுக்கு சீருடைகள், எழுது பொருட்கள் வழங்கப்பட்டன. முன்னாள் மாணவர்கள் பத்திரசாமி, சுப்ரமணி, முத்துசாமி, செந்தில்குமார் உள்பட பலர் பேசினர். நிகழ்ச்சிகளை, ஷானவாஸ் தொகுத்து வழங்கினார். ரங்கராஜன் நன்றி கூறினார்.
