தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ எஸ்.எஸ். குளம் குறுமைய தடகள போட்டி

எஸ்.எஸ். குளம் குறுமைய தடகள போட்டி

எஸ்.எஸ். குளம் குறுமைய தடகள போட்டி


ADDED : ஆக 20, 2026 05:31 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 20, 2026 05:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெ.நா.பாளையம், ஆக. 21-

துடியலூர் அருகே வட்டமலை பாளையத்தில் உள்ள ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லூரியில் எஸ்.எஸ். குளம் குறுமைய அளவிலான தடகள விளையாட்டு போட்டிகள் துவங்கியது.

முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் சிவசக்தி, ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர் சாரதா, ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லூரி துணை முதல்வர் கருப்புசாமி மற்றும் முத்து கவுண்டர் அரசு மேல்நிலைப்பள்ளி முதல்வர் கீதா ஆகியோர் துவக்கி வைத்தனர்.

அன்னூர் கல்வி மாவட்ட, 29 பள்ளிகளை சேர்ந்த, 1200 மாணவர்கள் பங்கேற்றனர். முதல் நாள் போட்டியில், 100 முதல் 3000 மீட்டர் வரையிலான தடகள போட்டிகள், ஈட்டி எறிதல், வட்டு எறிதல், டேபிள் டென்னிஸ், வாலிபால், கபடி, பேஸ்கட்பால், கேரம், குண்டு எறிதல், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல், சிலம்பம், இறகு பந்து உள்ளிட்ட, 49 வகையான போட்டிகள் நடந்தன. இன்று நிறைவு நாள் போட்டிகள் நடக்கின்றன. இப்போட்டிகளில் வெற்றி பெறுபவர்கள் மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பை பெறுவர்.

(படம் திரு. விக்னேஷ்)

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us