ADDED : ஜூலை 10, 2026 07:42 PM
அ நிறம் | அளவு
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம் சார்பில், தலைமை தபால் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. தலைவர் சாந்தி தலைமை வகித்தார். செயலாளர் சுருளிவேல் முன்னிலை வகித்தார். அமைப்பு செயலாளர் நாராயணசாமி பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில், ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தின் கீழ், ஜி.எஸ்.டி.,களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்க வேண்டும். குழு காப்பீட்டு தொகையை, ஐந்து லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும். 180 நாட்கள் வரை ஊதிய விடுப்பை எடுத்துச் செல்ல வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். பொருளாளர் முஸ்தபா, உதவி செயலாளர் சிவதாசன் பங்கேற்றனர்.
