/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிங்காநல்லுார் வசந்தா மில் ரோட்டில் பள்ளமோ பள்ளம்! நொந்து நுாலாகிறது வாகன ஓட்டிகள் உள்ளம்
/
சிங்காநல்லுார் வசந்தா மில் ரோட்டில் பள்ளமோ பள்ளம்! நொந்து நுாலாகிறது வாகன ஓட்டிகள் உள்ளம்
சிங்காநல்லுார் வசந்தா மில் ரோட்டில் பள்ளமோ பள்ளம்! நொந்து நுாலாகிறது வாகன ஓட்டிகள் உள்ளம்
சிங்காநல்லுார் வசந்தா மில் ரோட்டில் பள்ளமோ பள்ளம்! நொந்து நுாலாகிறது வாகன ஓட்டிகள் உள்ளம்
ADDED : செப் 09, 2024 01:03 AM

குண்டும், குழியுமான ரோடு
வெள்ளக்கிணறு - துடியலுார் ரோட்டில், ரயில்வே கேட் அருகேசாலையில் பல இடங்கள் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள் கீழே விழுந்து படுகாயமடைகின்றனர். பெரிய விபத்துகளால், உயிரிழப்புகள் நிகழும் முன் விரைந்து சாலையை சீரமைக்க வேண்டும்.
- ராஜா, வெள்ளக்கிணறு.
இருளால் தொடரும் அச்சம்
சரவணம்பட்டி, எஸ்.என்.எஸ்., கல்லுாரி அருகே, வையாபுரி நகரில், ஐந்தாவது வார்டு, 'எஸ்.பி-23 பி- 52' என்ற எண் கொண்ட கம்பத்தில், கடந்த ஒரு மாதமாக விளக்கு எரியவில்லை. கடும் இருள் காரணமாக, 6:00 மணிக்கு மேல், வெளியே செல்ல பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது.
- தங்கவேல், சரவணம்பட்டி.
டெங்கு அபாயம்
நீலிக்கோணாம்பாளையம், பெருமாள் கோவில் வீதி பின்புறம், சாக்கடை கால்வாயோரம் கடந்த ஆறு மாதங்களாக பைப்புகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இதனால், சாக்கடை கால்வாய் சுத்தம் செய்யாததால், கழிவுநீர் தேங்கி நிற்கிறது. குடியிருப்பு பகுதியில் கொசுத்தொல்லையும், துர்நாற்றமும் அதிகமாக உள்ளது.
- ஸ்ரீநிதி, பெருமாள் கோவில் வீதி.
இரவில் அதிகரிக்கும் விபத்து
சிங்காநல்லுார், 55வது வார்டு, வசந்தா மில் ரோட்டில் பல இடங்களில் பள்ளங்களாக உள்ளது. வாகனஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். முக்கியமாக, இரவு நேரங்களில் அதிக விபத்து நடக்கிறது. வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாவதால், விரைந்து சாலையை சீரமைக்க வேண்டும்.
- ராஜேந்திரன், சிங்காநல்லுார்.
சாலையில் ஓடும் குதிரைகள்
கோவைப்புதுார், 90வது வார்டில்சாலையில் திரியும் குதிரைகளால், வாகனஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர். சாலையில் திரியும் 10க்கும் மேற்பட்ட குதிரைகள்,ஒன்றுக்கொன்று சண்டையிட்டு, திடீரென சாலையில் ஓடுகின்றன. உரிமையாளர்களிடம் பலமுறை புகார் செய்தும் நடவடிக்கையில்லை.
- பிரபாகரன், கோவைப்புதுார்.
குப்பையால் தடைபடும் கால்வாய்
செல்வபுரம் சிந்தாமணிக்குளத்தின் பாதி குளம் வரையிலும், ஆகாயத்தாமரை மூடியுள்ளது. குளத்திற்கு தண்ணீர் வரும் கால்வாய்களில், சிலர் குப்பை மூட்டைகளை வீசிச்செல்கின்றனர். இதனால், கால்வாய் அடைத்து தண்ணீர் வருவதும் தடைபடுகிறது.
- பாலமுருகன், செல்வபுரம்.
அணைந்திருக்கும் விளக்கு
விளாங்குறிச்சி, ஒன்பதாவது வார்டு, பேங்கர்ஸ் காலனி, பார்க் அருகில் உள்ள 'எஸ்.பி -19 பி -38' என்ற எண் கொண்ட கம்பத்தில், கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக தெருவிளக்கு எரியவில்லை. அடிக்கடி தெருவிளக்கு பழுதாகிறது. மின்வாரிய பணியாளர்களிடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கையில்லை.
- சுந்தரராஜ், விளாங்குறிச்சி.
மின்விபத்து அபாயம்
ரேஸ்கோர்ஸ் நடைபாதையில், ஸ்டேன்ஸ் நிறுவனம் எதிரில், மின்கம்பத்தின் அடியில் ஸ்விட்ச் பாக்ஸ் திறந்த நிலையில் உள்ளது. மின்ஒயர்கள் வெளியே நீட்டிக்கொண்டிருப்பதால், குழந்தைகள் தொடுவதற்கு வாய்ப்புள்ளது. மின்விபத்து ஏற்படும் முன், மூடியிட வேண்டும்.
- யுவராஜ், திருமகள்நகர்.
சாலையில் பூந்தொட்டி ஆக்கிரமிப்பு
சவுரிபாளையம் ரோடு, ஜி.வி.ரெசிடன்சி, 58வது வார்டு, வேலன் காபி அருகே, சாலையில் பூந்தொட்டிகளை வைத்து ஆக்கிரமித்துள்ளனர். சுற்றுச்சுவரிலிருந்து இரண்டிதுாரத்திற்கு சாலையில் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. பெரிய வாகனங்கள் வரும் போது இருசக்கர வாகனங்கள் ஒதுங்குவதற்கு கூட இடமில்லை.
- சரவண வேல், ஜி.வி.,ரெசிடன்சி.
மூச்சு முட்டுது; கண் எரியுது
அசோகபுரம், மந்திராலயம் கார்டன் பகுதியில், தெருக்களில் சேகரிக்கும் குப்பையை, ரயில்வே பாலத்தின் கீழே கொட்டுகின்றனர். பிளாஸ்டிக் கழிவுகளை எரிப்பதால், கரும் புகை அருகிலுள்ள குடியிருப்பு பகுதி முழுவதும் பரவுகிறது. பல நாட்களுக்கு, தொடர்ந்து எரிந்துகொண்டே இருக்கிறது. ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் செய்தும் நடவடிக்கையில்லை.
- விக்னேஷ், அசோகபுரம்.