/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பி.பி.ஜி., நர்சிங் கல்லூரி பட்டமளிப்பு விழா
/
பி.பி.ஜி., நர்சிங் கல்லூரி பட்டமளிப்பு விழா
ADDED : செப் 01, 2024 01:27 AM

கோவை;கோவை சரவணம்பட்டியில் உள்ள பி.பி.ஜி., செவிலியர் கல்லூரி மற்றும் மருத்துவம் சார்ந்த கல்வி கல்லூரிகளின் பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது.
பி.பி.ஜி., கல்விக் குழுமங்களின் தலைவர் தங்கவேலு தலைமை வகித்தார். நர்சிங் கல்லூரி முதல்வர் சித்ரா வரவேற்றார். விழாவில், மாணவ மாணவியருக்கு பட்டங்களை வழங்கி, எம்.ஜி.ஆர்., பல்கலை துணைவேந்தர் நாராயணசாமி பேசுகையில், ''கிராமப்புற மாணவர்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றால் தொழில் கல்வி தேவை. மருத்துவம் சார்ந்த தொழில் கல்வி, மனித குலத்திற்கு சிறப்பான சேவையாற்ற உதவும். கல்வி கற்பதோடு வேலைக்கு சென்று விடாமல், தங்கள் பெற்ற அனுபவங்களை பகிர்ந்து கொள்ள, ஆண்டுக்கு ஒரு முறை, கல்லூரியிலேயே மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்த வேண்டும், என்றார்.
பட்டமளிப்பு விழாவில், பி.பி.ஜி., கல்விக் குழுமங்களின் துணைத்தலைவர் அக்சய், மருத்துவம் சார்ந்த கல்வி இயக்குனர் அஸ்வின் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 700 மாணவ, மாணவியருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. பி.பி.ஜி., மருத்துவம் சார்ந்த படிப்புகள் கல்லூரியின் முதல்வர் ஆண்ட்ரியா நன்றி தெரிவித்தார்.