/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பூ உதிர்வை குறைப்பது குறித்து செயல் விளக்கம்
/
பூ உதிர்வை குறைப்பது குறித்து செயல் விளக்கம்
ADDED : மே 10, 2024 10:30 PM
அன்னூர்;பூ உதிர்வை குறைப்பது குறித்து, வேளாண் மாணவியர் விவசாயிகளுக்கு செயல் விளக்கம் செய்து காண்பித்தனர்.
மாமரம் மற்றும் பழப் பயிர்களில் பூ உதிர்வை கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு தேம்மோர் கரைசல் தயாரிப்பது குறித்து, ஜே.கே.கே. முனி ராஜா வேளாண்மை கல்லூரியின் இளங்கலை இறுதியாண்டு வேளாண் மாணவியர், 10 பேர் செயல் விளக்கம் செய்து காண்பித்தனர்.
பணி அனுபவத் திட்டத்தில் அன்னூரில் தங்கியுள்ள இம்மாணவியர் பசூரில் ஒரு தோட்டத்தில் தேம்மோர் கரைசல் தயாரிப்பது குறித்து கூறுகையில், 'வெண்ணை நீக்கிய மோர் ஐந்து லிட்டர் எடுத்து, நான்கு அல்லது ஐந்து நாட்கள் பாத்திரத்தில் மூடி வைத்து நன்கு புளிக்க வைக்க வேண்டும்.
ஐந்தாம் நாள், மூன்று தேங்காயிலிருந்து எடுக்கப்பட்ட தேங்காய் பாலை மோருடன் சேர்த்து மூன்று நாட்கள் மீண்டும் புளிக்க வைக்க வேண்டும். மழை நீர் மற்றும் வெயில் படாதவாறு நிழலில் வைக்க வேண்டும்.
இந்த கரைசலை, இரண்டு முறை பூக்கும் பருவத்தில் தெளிக்க வேண்டும். இதனால் கத்தரி, தக்காளி, வெண்டை போன்ற காய்கறிப் பயிர்களுக்கும், கொய்யா, மா, சப்போட்டா, நெல்லி உள்ளிட்ட பழப் பயிர்களுக்கும், பூக்கும் முன்பும், பூத்த பின்பும் தெளிக்கலாம். இதனால் பூக்கள் உதிர்வது குறையும்,' என்றனர். இதில் அப்பகுதி விவசாயிகள் பங்கேற்றனர்.