ADDED : ஜூன் 22, 2026 07:20 PM
பொள்ளாச்சி: பொள்ளாச்சி எம்.எம்.எஸ்., பள்ளியில், உலக யோகா தினம் கொண்டாடப்பட்டது.
பொள்ளாச்சி கோபாலபுரம் முத்துசாமி கவுண்டர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், உலக யோகா தினத்தையொட்டி, 6,7 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்கள் யோகாசனம் செய்து அசத்தினர். அதில், தியானம், உஷ்டராசனம், சஷாங்காசனம், விருட்சாசனம், சவாசனம் உள்ளிட்ட யோகாசனங்களை செய்து அசத்தினர். யோகாசனத்தின் நன்மைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. பள்ளி நிர்வாகத்தினர், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
* வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியில் கல்லுாரி, போலீஸ் ஸ்டேசன், வனத்துறை, மருத்துவமனை, நகராட்சி துறை, அரசு போக்குவரத்துக்கழகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. வால்பாறை அரசு மருத்துவமனை யோகா மற்றும் இயற்கை மருத்துவர் நந்தினி, சிகிச்சையாளர் ராம்குமார் ஆகியோர் கலந்து கொண்டு, யோகா பயிற்சி அளித்தனர்.
அவர்கள் பேசும் போது, ‘யோகா பயிற்சி உயற்பயிற்சி மட்டுமல்ல, அது ஆரோக்கியமான வாழ்க்கை முறையாகும். யோகா பயிற்சி செய்வதன் வாயிலாக ஆரோக்கியம், அமைதி மற்றும் மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கையை உறுதி செய்யலாம்.
மேலும் இந்த பயிற்சி தொடர்ந்து செய்யும் போது, உடலில் புத்துணர்ச்சியும், ஆரோக்கியமும் ஏற்படுகிறது. உடல், மனம், அறிவு, ஆற்றல் ஆகியவை சிறப்பாக அமையும்,’ என்றனர்.
