/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
லங்கா கார்னரில் 'ப்ரீகாஸ்ட்' மழைநீர் வடிகால் தண்ணீர் தேக்க பிரச்னைக்கு நிரந்தர தீர்வு
/
லங்கா கார்னரில் 'ப்ரீகாஸ்ட்' மழைநீர் வடிகால் தண்ணீர் தேக்க பிரச்னைக்கு நிரந்தர தீர்வு
லங்கா கார்னரில் 'ப்ரீகாஸ்ட்' மழைநீர் வடிகால் தண்ணீர் தேக்க பிரச்னைக்கு நிரந்தர தீர்வு
லங்கா கார்னரில் 'ப்ரீகாஸ்ட்' மழைநீர் வடிகால் தண்ணீர் தேக்க பிரச்னைக்கு நிரந்தர தீர்வு
ADDED : மே 22, 2024 01:38 AM

கோவை:லங்கா கார்னரில் இருந்து வாலாங்குளத்துக்கு செல்லும் வகையில், 11 மீட்டர் நீளத்துக்கு 'ப்ரீகாஸ்ட்' தொழில்நுட்பத்தில் ரெடிமேடு கட்டமைப்பு கொண்டு, மழைநீர் வடிகால் அமைக்கப்படுகிறது.
கோவை மாநகரில் மழைநீர் வடிகால் வசதி போதிய அளவில் இல்லாததால் மழை காலங்களில் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் சிரமங்களை சந்திக்க வேண்டியுள்ளது.
குறிப்பாக, லங்கா கார்னர் ரயில்வே பாலம், அவிநாசி ரோடு மேம்பாலம், கிக்கானி பள்ளி அருகே ரயில்வே பாலம் உள்ளிட்டவற்றில் மழைநீரில் வாகனங்கள் சிக்கிக்கொள்வது தொடர் கதையாக உள்ளது.
தேங்கும் மழை நீரால் வாகன விபத்து, மின் விபத்துகளால் உயிரிழப்பும் ஏற்படுகிறது. குறிப்பாக, லங்கா கார்னரில் சிறிது நேரம் மழை பெய்தால், பாதிப்போ பெரியளவில் உள்ளது.
ஸ்டேட் பாங்க் ரோடு, கூட்ஷெட் ரோடு வழியாக வரும் தண்ணீர் இப்பாலத்தை கடந்து செல்வதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர்.
இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண, லங்கா கார்னர் பாலம் மேற்கே டவுன்ஹால் செல்லும் ரோட்டின் குறுக்கே, மழைநீர் வடிகால் அமைத்து வாலாங்குளத்துக்கு தண்ணீர் செல்லும் வகையில் திட்டமிடப்பட்டது.
ரோட்டின் குறுக்கே குழி தோண்டப்பட்டு பணிகள் வேகப்படுத்தப்பட்டுள்ளன. டவுன்ஹாலில் இருந்து ரயில்வே ஸ்டேஷன் நோக்கி பாலத்தின் அடியே, வாகனங்கள் வழக்கம்போல் செல்கின்றன.
ஸ்டேட் பாங்க் ரோடு வழியாக டவுன்ஹால் செல்லும் வாகனங்கள் ஜி.எச்., எதிரே வாலாங்குளம் ரோடு வழியாக, சுங்கம் பைபாஸில் செல்லும் வகையில் திருப்பி விடப்பட்டுள்ளன.
'ப்ரீகாஸ்ட்' தொழில்நுட்பத்தில், ஏற்கனவே கான்கிரீட் கலவை கொண்டு தயாரிக்கப்பட்ட ரெடிமேடு கட்டமைப்பு கொண்டு, மழைநீர் வடிகால் அமைக்கப்படுகிறது.
மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், 'கான்கிரீட் கலவை கொண்டு அமைத்தால், காலதாமத மாகும் என்பதால், 'ப்ரீகாஸ்ட்' தொழில்நுட்பத்தில் மழைநீர் வடிகால் அமைக்கப்படுகிறது.
ரோட்டின் குறுக்கே, 11 மீட்டர் நீளம், 1.60 மீட்டர் அகலத்துக்கு ரெடிமேடு கான்கிரீட் கொண்டு, மழைநீர் வடிகால் அமைக்கப்படுகிறது.
'ரூ.5 லட்சம் மதிப்பீட்டிலான இப்பணிகளை ஒரு நாளில் முடிக்க திட்டமிட்டுள்ளோம்' என்றார்.

