/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முதல்வர் கோப்பை கால்பந்து போட்டி: விவேக் வித்யாலயா பள்ளி முதலிடம்
/
முதல்வர் கோப்பை கால்பந்து போட்டி: விவேக் வித்யாலயா பள்ளி முதலிடம்
முதல்வர் கோப்பை கால்பந்து போட்டி: விவேக் வித்யாலயா பள்ளி முதலிடம்
முதல்வர் கோப்பை கால்பந்து போட்டி: விவேக் வித்யாலயா பள்ளி முதலிடம்
ADDED : செப் 12, 2024 09:42 PM

கோவை : முதல்வர் கோப்பை பள்ளி மாணவியருக்கான கால் பந்து போட்டியில் விவேக் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அணி முதலிடம் பிடித்துள்ளது.
முதல்வர் கோப்பை பள்ளி மாணவர்களுக்கான கால் பந்து போட்டிகள் பாரதியார் பல்கலையிலும், மாணவியருக்கான போட்டிகள் ஸ்ரீ கிருஷ்ணா இன்ஜி., மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியிலும் நடக்கிறது.
இதில், மாணவர்கள் பிரிவில், 64 அணிகளும், மாணவியர் பிரிவில், 13 அணிகளும் பங்கேற்றுள்ளன.
பாரதியார் பல்கலையில் பல்வேறு சுற்றுகளின் நிறைவில், இன்று நடக்கும் காலிறுதி போட்டியில் சூலுார் அரசு மேல்நிலைப் பள்ளி அணி, நேரு மெட்ரிக் மேல்நிலை பள்ளி அணியையும், கே.பி.எம்., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அணி, கிக்கானி பள்ளியையும், ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி, சந்திரகாந்தி மெட்ரிக் பள்ளி அணியையும், புனித தாமஸ் மேல்நிலைப்பள்ளி அணி, பயனீர் மேல்நிலைப்பள்ளி அணியையும் எதிர்கொள்கின்றன.
ஸ்ரீ கிருஷ்ண இன்ஜி., கல்லுாரி மைதானத்தில் மாணவியருக்கான கால் பந்து போட்டிகள் நடந்தது. நேற்று நடந்த இறுதி போட்டியில், விவேக் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அணி, 5-3 என்ற கோல் கணக்கில் மைக்கேல் ஜாப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அணியை வென்று முதலிடம் பிடித்தது.
புனித ஏன்ஸ் மெட்ரிக் பள்ளி அணி, 3-0 என்ற கோல் கணக்கில் மணி மேல்நிலைப்பள்ளி அணியை வென்று மூன்றாம் இடம் பிடித்தது.