/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வழுக்கி விழுந்து கை, கால் முறியும் கைதிகள்! நீதிபதியிடம் வக்கீல்கள் புகார்

ADDED : ஆக 23, 2024 01:34 AM

கோவை:விசாரணைக்கு அழைத்து செல்லப்படும் கைதிகள், வழுக்கி விழுந்து காயம் ஏற்படுவது தொடர்பாக, நீதிபதியிடம் வக்கீல்கள் புகார் மனு அளித்தனர்.
கோவை மாவட்ட முதன்மை நீதிபதியிடம், 200க்கும் மேற்பட்ட வக்கீல்கள் கையெழுத்திட்டு அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
வழக்கு சம்பந்தமாக கைது செய்யப்படும் நபர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்துவது, விசாரணைக்கு அழைத்து செல்லும்போது வழுக்கி விழுந்து விட்டதாக கூறி, கை, கால்களை முறிப்பது போன்ற புதிய கலாசார நடைமுறை, தமிழக காவல்துறையில் பின்பற்றப்படுகிறது.
கைது செய்யப்படுவோருக்கு காவல்துறையால் தரப்படும் சித்ரவதை, தண்டனைகள், நீதிமன்ற விசாரணை அதிகாரத்தின் மீது நடத்தப்படும் அத்துமீறலாகும். காவல்துறையினர் சட்டத்திற்கு புறம்பாக மனித உரிமை மீறலில் ஈடுபடுகின்றனர்.
வக்கீல்கள் காவல் நிலையம் செல்லும்போது, தங்கள் எதிரிலேயே குற்றம் சாட்டப்படும் நபர்கள் தாக்கப்படுவதை நேரடியாக காணமுடிகிறது. எனவே, போலீசாரால் ஏற்படும் மனித உரிமை மீறல்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் தெரிவித்துள்ளனர்.