/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பரிசு
/
அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பரிசு
ADDED : ஜூன் 11, 2024 12:11 AM
பொள்ளாச்சி:பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், பொதுத்தேர்வில், பள்ளி அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், கோடை விடுமுறைக்குப் பிறகு நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில், பள்ளி அளவில் முதல் மூன்று இடங்கள் பிடித்த மாணவர்களுக்கு பரிசு வழங்கியும் வாழ்த்து தெரிவித்தும் ஊக்குவிக்கப்பட்டனர்.
கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'பள்ளி, இறைவணக்கக் கூட்டத்தில் பொதுத்தேர்வில், முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு பரிசு வழங்கி ஊக்குவிக்கப்பட்டனர். இதற்காக, பிளஸ் 2 வகுப்பு முடித்துச் சென்ற மாணவர்களும் வரவழைக்கப்பட்டனர். இதனால், நடப்பு கல்வியாண்டு, பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், அதிக மதிப்பெண் பெறுவதற்கு முனைப்பு காட்டுவர். அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெற்ற மாணவ, மாணவியர் அனுபவங்களை பகிரும் போது, நடப்பாண்டு மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கும்,' என்றனர்.

