/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பி.எஸ்.ஜி., கோப்பை கூடைப்பந்து; வென்றது இந்தியன் வங்கி அணி
/
பி.எஸ்.ஜி., கோப்பை கூடைப்பந்து; வென்றது இந்தியன் வங்கி அணி
பி.எஸ்.ஜி., கோப்பை கூடைப்பந்து; வென்றது இந்தியன் வங்கி அணி
பி.எஸ்.ஜி., கோப்பை கூடைப்பந்து; வென்றது இந்தியன் வங்கி அணி
ADDED : ஆக 14, 2024 08:52 PM

கோவை : பி.எஸ்.ஜி., கோப்பைக்கான அகில இந்திய கூடைப்பந்து இறுதிப்போட்டியில், இந்திய ராணுவ அணியை வீழ்த்தி, இந்தியன் வங்கி அணி கோப்பையை கைப்பற்றியது.
பி.எஸ்.ஜி., ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில், 58-வது ஆண்கள் பி.எஸ்.ஜி., கோப்பைக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டி, ஆக., 9ம் தேதி முதல் 13ம் தேதி வரை, பீளமேடு பி.எஸ்.ஜி., டெக் உள்விளையாட்டு அரங்கில் நடந்தது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து, சிறந்த எட்டு அணிகள் தேர்வு செய்யப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இறுதிப்போட்டியில், டில்லி இந்திய ராணுவ அணி மற்றும் சென்னை இந்தியன் வங்கி அணிகள் மோதின.
இப்போட்டியில் இந்தியன் வங்கி அணி, 71 - 66 என்ற புள்ளிக்கணக்கில் ராணுவ அணியை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது. இந்தியன் வங்கி அணிக்காக பாலதனேஸ்வர் 23 புள்ளிகளை சேர்த்தார். ராணுவ அணி சார்பில் ஜெய்பிர் ஹூடா 26 புள்ளிகள் எடுத்தார். மூன்றாம் இடத்துக்கான போட்டியில், இந்தியன் ரயில்வே அணி 81 - 70 என்ற புள்ளிக்கணக்கில், மத்திய செயலக அணியை வீழ்த்தியது.
முதலிடம் பிடித்த இந்தியன் வங்கி அணிக்கு ரூ.1 லட்சம், பி.எஸ்.ஜி., சுழல் கோப்பை, இரண்டாம் இடம் பெற்ற இந்திய ராணுவ அணிக்கு ரூ.75 ஆயிரம், கோப்பை, மூன்றாம் இடம் பெற்ற -இந்தியன் ரயில்வே அணிக்கு ரூ.50 ஆயிரம், நான்காம் இடம் பெற்ற மத்திய செயலக அணிக்கு ரூ. 25 ஆயிரம் மற்றும் சிறந்த விளையாட்டு வீரராக தேர்வு செய்யப்பட்ட- இந்தியன் வங்கி அணி வீரர் பிரணவ் பிரின்ஸ்க்கு, ரூ.10 ஆயிரம் பரிசாக வழங்கப்பட்டது.
பரிசுகளை, மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார், பி.எஸ்.ஜி., கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் வழங்கினர்.