/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஐ.பி.ஏ.ஏ., விளையாட்டு போட்டிகளில் பி.எஸ்.ஜி., பாலிடெக்னிக் அணி 'டாப்'
/
ஐ.பி.ஏ.ஏ., விளையாட்டு போட்டிகளில் பி.எஸ்.ஜி., பாலிடெக்னிக் அணி 'டாப்'
ஐ.பி.ஏ.ஏ., விளையாட்டு போட்டிகளில் பி.எஸ்.ஜி., பாலிடெக்னிக் அணி 'டாப்'
ஐ.பி.ஏ.ஏ., விளையாட்டு போட்டிகளில் பி.எஸ்.ஜி., பாலிடெக்னிக் அணி 'டாப்'
ADDED : ஆக 25, 2024 10:44 PM
கோவை;மண்டல அளவிலான ஐ.பி.ஏ.ஏ., டேபிள் டென்னிஸ் போட்டியில், பி.எஸ்.ஜி., பாலிடெக்னிக் அணி முதலிடம் பிடித்தது.
பி.எஸ்.ஜி., பாலிடெக்னிக் கல்லுாரியில் 'இன்டர் பாலிடெக்னிக் அதலெடிக் அசோசியேசன்'(ஐ.பி.ஏ.ஏ.,) சார்பில், மண்டல அளவிலான ஆண்களுக்கான டேபிள் டென்னிஸ், பேட்மின்டன், கேரம் போட்டிகள் இரு நாட்கள் நடந்தன. போட்டிகளை, கல்லுாரியின் ஜவுளி தொழில்நுட்ப துறை தலைவர் செந்தில்குமார் துவக்கிவைத்தார்.
இதில், 13 பேட்மின்டன் அணிகளும், 14 கேரம் அணிகளும், ஆறு டேபிள் டென்னிஸ் அணிகளும் பங்கேற்றன. பல்வேறு சுற்றுகளை அடுத்து நடந்த இறுதி டேபிள் டென்னிஸ் போட்டியில், பி.எஸ்.ஜி., பாலிடெக்னிக் கல்லுாரி அணி, 3-1 என்ற செட் கணக்கில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மிசன் வித்யாலயா அணியை வென்று, முதலிடம் பிடித்தது.
ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் அணி, ஸ்ரீ கிருஷ்ணா பாலிடெக்னிக் அணியை, 3-0 என்ற செட் கணக்கில் வென்று, மூன்றாம் இடம் பிடித்தது. பேட்மின்டன் போட்டியில் பி.எஸ்.ஜி., பாலிடெக்னிக் அணி, நாச்சிமுத்து பாலிடெக்னிக் அணியை, 2-1 என்ற செட் கணக்கில் வென்று முதலிடம் பிடித்தது.
ஸ்ரீ ராமகிருஷ்ணா மிசன் வித்யாலயா அணி, 2-0 என்ற செட் கணக்கில் ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் அணியை வென்று, மூன்றாம் இடம் பிடித்தது.
கேரம் போட்டியில், நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லுாரி அணி, 2-1 என்ற செட் கணக்கில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா அணியை வென்று, முதலிடம் பிடித்தது.
ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் அணி, 2-1 என்ற செட் கணக்கில் சி.ஐ.டி., கல்லுாரி அணியை வென்று, மூன்றாம் இடம் பிடித்தது. வெற்றி பெற்றவர்களுக்கு, கல்லுாரி முதல்வர் கிரிராஜ் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.