/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புதர் சூழ்ந்த நிழற்கூரை பொதுமக்கள் அதிருப்தி
/
புதர் சூழ்ந்த நிழற்கூரை பொதுமக்கள் அதிருப்தி
ADDED : ஆக 24, 2024 02:05 AM

வால்பாறை;வால்பாறை அருகே, பன்னிமேடு பகுதியில் உள்ள பயணியர் நிழற்கூரையை புதிதாக கட்டவும், புதர் அகற்றி சுத்தம் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
வால்பாறை, பன்னிமேடு பங்களா டிவிஷன், தமிழக -- கேரள எல்லையில் உள்ளது. இங்குள்ள பயணியர் நிழற்கூரையை புதர் சூழ்ந்துள்ளது. இதனால், பயணியர் பயன்படுத்த முடியாமல் அவதிப்படுகின்றனர்.
இரவு நேரத்தில் சிறுத்தையும், பகல் நேரத்தில் பாம்புகளும் புதருக்குள் தஞ்சமடைகின்றன. எஸ்டேட் பகுதி மக்களின் நலன் கருதி, பயணியர் நிழற்கூரையை இடித்து, நவீன முறையில் புதியதாக கட்ட வேண்டும். அப்பகுதியில் உள்ள புதரை அகற்றி, துாய்மையாக பராமரிக்க வேண்டும்.
பொதுமக்கள் கூறுகையில், 'கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பயணியர் நிழற்கூரை பழுதடைந்துள்ளது. சமீப காலமாக புதர் சூழ்ந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
மக்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, நிழற்கூரையை புதிதாக கட்டவும், புதர் அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.