/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சம்
/
சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சம்
ADDED : ஆக 31, 2024 01:51 AM

மேட்டுப்பாளையம்;மேட்டுப்பாளையம் அருகே சிறுத்தை நடமாட்டம் தென்பட்டதால், அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
சிறுமுகை வனச்சரகத்திற்குட்பட்ட மேட்டுப்பாளையம் வெள்ளிப்பாளையம் சாலையில், கருப்பராயன் கோவில் அருகே சிறுத்தை தென்பட்டது. இதையடுத்து, சம்பவ இடத்தில் வனத்துறையினர் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது விளைநிலம் ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் சிறுத்தையின் நடமாட்டம் பதிவாகி இருந்தது கண்டறியப்பட்டது.
இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறுகையில், 'எங்கள் பகுதியில் தெரு நாய்கள் காணாமல் போனது. இரவு நேரங்களில் திடீரென மர்ம சத்தம் கேட்கும். சிறுத்தையின் கால் தடம் தென்படும். ஆனால் அவ்வுளவு தெளிவாக தெரியாது. இப்போது அது உறுதியாகி உள்ளது.சிறுத்தையை வனத்துறையினர் உடனடியாக பிடித்து அடர் வனப்பகுதிக்குள் விட வேண்டும்,' என்றனர். இதுகுறித்து சிறுமுகை வனச்சரகர் மனோஜ் கூறுகையில், 'அப்பகுதியில் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளன. அதில் சிறுத்தை நடமாட்டம் எங்கு உள்ளது என தெரிந்து கொண்டு, அடுத்த கட்ட நடவடிக்கையை எடுக்க உள்ளோம். பொதுமக்கள் யாரும் அச்சம் கொள்ள வேண்டாம்' என்றார்.