/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரயிலில் பெண்களுக்கு பாதுகாப்பான பயணம் ரயில்வே போலீசார் நடவடிக்கை
/
ரயிலில் பெண்களுக்கு பாதுகாப்பான பயணம் ரயில்வே போலீசார் நடவடிக்கை
ரயிலில் பெண்களுக்கு பாதுகாப்பான பயணம் ரயில்வே போலீசார் நடவடிக்கை
ரயிலில் பெண்களுக்கு பாதுகாப்பான பயணம் ரயில்வே போலீசார் நடவடிக்கை
ADDED : பிப் 10, 2025 05:42 AM

கோவை : பெண்களின் பாதுகாப்பான பயணத்துக்கு ரயில்வே ஸ்டேஷனில், போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.திருப்பூரை சேர்ந்த, 36 வயது பெண் ஆந்திர மாநிலத்தில் உள்ள தாயார் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது ஜோலார்பேட்டை அருகே ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்டார். இவ்வழக்கில் வேலுார் மாவட்டம் கே.வி.குப்பம் பூஞ்சோலையை சேர்ந்த ஹேமராஜ், 28 என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையடுத்து ரயிலில் செல்லும் பெண்கள் பாதுகாப்பை பலப்படுத்த ரயில்வே போலீசார் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். ரயில் பெட்டிகளில் ரோந்து பணியில் பெண்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முக்கிய ரயில்வே ஸ்டேஷன்களில் ரயில்கள் நிற்கும் போது, சோதனை நடத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக ரயில்வே ஸ்டேஷன்களில் ரயில்கள் நிற்கும் போதும், புறப்படும் போதும், ஒலிபெருக்கிகள் வாயிலாக பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். ஆபத்து காலங்களில் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் குறித்தும், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
பெண்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் போலீசார் எடுத்துரைக்கின்றனர்.
ரயில்வே போலீஸ் அலுவலர் ஒருவர் கூறுகையில்,'பெண்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. ரயில்வே ஸ்டேஷன்களில் ரயில்கள் நிற்கும் போது பெண் போலீசார், ஏதாவது அசம்பாவிதம் நடந்ததா என்பது குறித்து விசாரிக்கின்றனர். ரயில்வே ஸ்டேஷன்களிலும் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது,' என்றார்.