/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இன்றும், நாளையும் மழை வேளாண் பல்கலை தகவல்
/
இன்றும், நாளையும் மழை வேளாண் பல்கலை தகவல்
ADDED : ஆக 20, 2024 10:35 PM
கோவை:கோவையில் இன்றும், நாளையும் மிதமான மழை எதிர்பார்க்கப்படுவதாக, தமிழ்நாடு வேளாண் பல்கலை காலநிலை ஆராய்ச்சி மையம் கணித்துள்ளது.
அதன்படி, பகல் நேர வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸ் ஆகவும், இரவு நேர வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும். காலை நேர காற்றின் ஈரப்பதம், 80 சதவீதமாகவும், மாலை நேர காற்றின் ஈரப்பதம், 50 சதவீதமாகவும் இருக்கும்.
எதிர்பார்க்கப்படும் மழையினை பயன்படுத்தி, நடவு செய்த கார் பருவ நெல்லுக்கு 2வது மேலுரமாக ஒரு ஏக்கருக்கு யூரியா 25 கிலோ மற்றும் பொட்டாஷ் 10 கிலோ இடவும்.
மழை எதிர்பார்க்கப்படுவதால், சம்பா பருவ மத்திய கால நெல் ரகங்களுக்கு, மேட்டுப்பாத்தியின் வாயிலாக, நாற்றங்கால் அமைக்கவும்.
தற்போது கிடைக்கும் மழையை பயன்படுத்தி, மானாவாரியில் தீவனச்சோளம் அல்லது தட்டப்பயிர் விதைப்பு மேற்கொள்ளலாம். நிலவும் வானிலையை பயன்படுத்தி, இறவை பருத்தி விதைப்பினை ஆக., மாத்திற்குள் விதைக்க காலநிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

