/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மழைக்கு ஒழுகும் ரேஷன் கடை; சீரமைக்க மக்கள் கோரிக்கை
/
மழைக்கு ஒழுகும் ரேஷன் கடை; சீரமைக்க மக்கள் கோரிக்கை
மழைக்கு ஒழுகும் ரேஷன் கடை; சீரமைக்க மக்கள் கோரிக்கை
மழைக்கு ஒழுகும் ரேஷன் கடை; சீரமைக்க மக்கள் கோரிக்கை
ADDED : செப் 12, 2024 08:45 PM

கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு, வேலாயுதம்பாளையம் பகுதி நேர ரேஷன் கடையில், மழை நீர் ஒழுகுவதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
கிணத்துக்கடவு, தேவாரயபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட வேலாயுதம்பாளையத்தில், 400க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதி மக்களுக்கு, பகுதி நேர ரேஷன் கடை செயல்படுகிறது.
இந்த ரேஷன் கடையில் ரேஷன் பொருட்கள் வாங்கி செல்கின்றனர். ஆனால், கடந்த சில நாட்களாக இந்த கடையில் மழைநீர் கட்டடத்தின் மேற்கூரை வழியாக ஆங்காங்கே வடிந்து ஒழுகியது. இதனால், ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்ய சிரமம் ஏற்படுவதாக மக்கள் தெரிவித்தனர்.
மக்கள் கூறுகையில், 'வழக்கமாக பகுதி நேர ரேஷன் கடையில் பொருட்கள் வாங்கி செல்வோம். தற்போது, ரேஷன் கடை மழைக்கு ஒழுகுவதால், திறப்பதில்லை. இதற்கு மாற்று இடம் தேர்வு செய்து ரேஷன் பொருட்கள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கவில்லை,' என்றனர்.
ரேஷன் கடை ஊழியர்கள் கூறுகையில், 'மழை பெய்யும் நேரத்தில், கட்டடத்தின் மேற்கூரையில் நீர் தேக்கம் அடைந்து, ஆங்காங்கே நீர் வடிந்தது. இதுகுறித்து, ஊராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தோம்.
இன்னும் இரு நாட்களுக்குள் இந்த கட்டடத்தில் சீரமைப்பு பணிகள் செய்து தருவதாக தெரிவித்துள்ளனர். சீரமைப்பு பணிகள் முடியும் வரை ரேஷன் வினியோகம் செய்ய மாற்று இடத்தில் பணிகள் மேற்கொள்ள முயற்சிகள் நடந்து வருகிறது,' என்றனர்.