/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தக் ஷின் பாரத் ஹிந்தி பிரசார சபா சார்பில் ராஷ்ட்ரபாஷா தேர்வுகள்
/
தக் ஷின் பாரத் ஹிந்தி பிரசார சபா சார்பில் ராஷ்ட்ரபாஷா தேர்வுகள்
தக் ஷின் பாரத் ஹிந்தி பிரசார சபா சார்பில் ராஷ்ட்ரபாஷா தேர்வுகள்
தக் ஷின் பாரத் ஹிந்தி பிரசார சபா சார்பில் ராஷ்ட்ரபாஷா தேர்வுகள்
ADDED : ஆக 19, 2024 01:03 AM

கோவை;தக் ஷின் பாரத் ஹிந்தி பிரசார சபா தமிழக கிளை சார்பில், மாநிலம் முழுவதும் நேற்று பிராத்மிக், மத்யமா, ராஷ்ட்ரபாஷா ஆகிய பிரிவுகளில், லோயர் தேர்வுகள் நடந்தன.
அதன்படி, காலை 10:00 முதல் 12.30 வரை பிராத்மிக் தேர்வும், மதியம் 2:00 மணி முதல் 4:30 மணி வரை மத்யமா, ராஷ்ட்ரபாஷா தேர்வுகளை மாணவர்கள் எழுதினர். இத்தேர்வுகள் ஆண்டுதோறும் இரண்டு முறை, பிப்., மற்றும் ஆக., மாதம் நடைபெறும்.
இதேர்வுகளை எதிர்கொள்ள வயது தடையில்லை என்பதால், ஆரம்பப்பள்ளி மாணவர்கள் முதல் வயது முதிர்ந்த பெரியவர்கள் வரை, ஆர்வமாக தேர்வுகளில் பங்கேற்றனர்.
ஹிந்தி பிரசார சபா தமிழக செயற்குழு உறுப்பினர் ஜெயகரண் கூறுகையில், ''மாநிலம் முழுவதும், 2 லட்சம் பேர் இத்தேர்வை எழுதியுள்ளனர். தக் ஷின் பாரத் ஹிந்தி பிரசார சபா சார்பில் நடத்தப்படும், ஆறு நிலை தேர்வுகளை முடித்தால், இளநிலை பட்டம் பெற்றதற்கு சமம். 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இச்சான்றிதழ்களை வைத்து, எம்.ஏ., தேர்வு களை பல்கலைகளில் எதிர்கொள்ள முடியும். இத்தேர்வை எழுத வயது தடையில்லை,'' என்றார்.