/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கேரளாவுக்கு கடத்த முயன்ற ரேஷன் அரிசி பறிமுதல்
/
கேரளாவுக்கு கடத்த முயன்ற ரேஷன் அரிசி பறிமுதல்
ADDED : பிப் 25, 2025 10:43 PM
பொள்ளாச்சி, ; பொள்ளாச்சியில், ரேஷன் அரிசி கடத்த முயன்ற மூன்று பேரை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார் கைது செய்தனர்.
பொள்ளாச்சி குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார், கோவை - நாச்சிபாளையம் - வேலந்தாவளம் ரோடு - அப்பாச்சிகவுண்டன்பதி பஸ் ஸ்டாப் அருகே, கேரளாவுக்கு அத்தியாவசிய பொருட்கள் கடத்தப்படுகிறதா என கண்காணிப்பு மேற்கொண்டனர்.
அப்போது, கேரளா மாநிலம் வேலந்தாவளத்தை சேர்ந்த ராஜன், தேனி ஆண்டிப்பட்டியை சேர்ந்த ஆனந்த், கேரளா மாநிலம் கள்ளியம்பாறையை சேர்ந்த ரங்கசாமி ஆகியோர் இருசக்கர வாகனங்களில், கேரளாவுக்கு, 1,100 கிலோ ரேஷன் அரிசி கடத்த முயன்றது தெரியவந்தது.
இதையடுத்து, அவர்களை கைது செய்த போலீசார், ரேஷன் அரிசி மற்றும் வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.