/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரத்தினகிரி குமரக்கடவுள் கோவில் கும்பாபிஷேக விழா துவங்கியது
/
ரத்தினகிரி குமரக்கடவுள் கோவில் கும்பாபிஷேக விழா துவங்கியது
ரத்தினகிரி குமரக்கடவுள் கோவில் கும்பாபிஷேக விழா துவங்கியது
ரத்தினகிரி குமரக்கடவுள் கோவில் கும்பாபிஷேக விழா துவங்கியது
ADDED : மார் 06, 2025 11:53 PM
கோவில்பாளையம் ; கோவை-சத்தி தேசிய நெடுஞ்சாலையில், குரும்ப பாளையம் அருகே கரட்டுமேடு கோவில் என்று அழைக்கப்படும் ரத்தினகிரி குமரக்கடவுள் கோவில் உள்ளது. இக்கோவிலில் பல கோடி ரூபாய் செலவில் திருப்பணிகள் உபயதாரர்கள் உதவியோடு செய்து முடிக்கப்பட்டுள்ளன.
கும்பாபிஷேக விழா நேற்று துவங்கியது. அதிகாலையில் திருவிளக்கு வழிபாடு நடந்தது.
அடிவாரத்தில் உள்ள வன்னீஸ்வரர் சன்னதியில் இருந்து பக்தர்கள் தீர்த்த குடங்களை குன்றின் மேல் உள்ள கோவிலுக்கு எடுத்துச் சென்றனர். கோவில்பாளையம், காளப்பட்டி, சரவணம்பட்டியைச் சேர்ந்த பக்தர்கள், அறங்காவலர்கள், கோவில் பரிபாலன சபை உறுப்பினர்கள், அறநிலையத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
இன்று (7ம் தேதி) காலை இரண்டாம் கால கேள்வியும், மாலையில் மூன்றாம் கால வேள்வியும் நடக்கிறது. நாளை (8ம் தேதி) காலை விமான கலசங்கள் நிறுவுதல், நான்காம் கால வேள்வி பூஜை நடக்கிறது. வருகிற 9ம் தேதி அதிகாலை 5:30 மணிக்கு பாத விநாயகர், இடும்பன், கடம்பன், கன்னிமார், வன்னீஸ்வரர் மற்றும் நாகசக்தி அம்மனுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது.
காலை 7:45 மணிக்கு விமானத்திற்கும், 8:15 மணிக்கு குமர கடவுளுக்கும், புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்படுகிறது. மாலையில் முருகப் பெருமானுக்கு திருக்கல்யாணம் நடக்கிறது.
விழாவில் சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகள் உட்பட பலர் பங்கேற்கின்றனர்.