/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தினமும் செய்தித்தாள் வாசிக்கணும்! மாணவர்களுக்கு கலெக்டர் அறிவுரை
/
தினமும் செய்தித்தாள் வாசிக்கணும்! மாணவர்களுக்கு கலெக்டர் அறிவுரை
தினமும் செய்தித்தாள் வாசிக்கணும்! மாணவர்களுக்கு கலெக்டர் அறிவுரை
தினமும் செய்தித்தாள் வாசிக்கணும்! மாணவர்களுக்கு கலெக்டர் அறிவுரை
ADDED : மே 03, 2024 12:18 AM

கோவை:'புத்தகம் வாசிப்பு மற்றும் செய்தித்தாள் படிக்கும் பழக்கத்தை மாணவர்கள் தினமும் மேற்கொள்ள வேண்டும்' என, கலெக்டர் கிராந்திகுமார் அறிவுறுத்தினார்.
கோவை கலெக்டர் கிராந்திகுமார், தினமும் ஒரு தாலுகாவுக்கு சென்று, அங்கு நடக்கும் அரசு துறை தொடர்பான வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்து, அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்குவது வழக்கம்.
லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், ஆய்வு பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. ஓட்டுப்பதிவு முடிந்ததை தொடர்ந்து, தேர்தல் ஆணையத்தில் சிறப்பு அனுமதி பெற்று, பொதுமக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகிறது.
கோவை பாலசுந்தரம் ரோட்டில், ரூ.14.87 கோடியில், 250 மாணவர்கள் தங்கும் வகையில் புதிதாக கட்டப்படும் ஆதிதிராவிடர் நல கல்லுாரி மாணவர் விடுதி; ரூ.3.51 கோடியில், 150 மாணவர்கள் தங்கும் வகையில் விடுதி; வெங்கிட்டாபுரம், சிவானந்தா காலனியில் கட்டப்படும் அங்கன்வாடி மையங்கள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், பிற்படுத்தப்பட்டோர் நல மாணவர் விடுதியை, கலெக்டர் கிராந்திகுமார் நேற்று நேரில் பார்வையிட்டு, தரமாக பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.
வெங்கிட்டாபுரம் அங்கன்வாடி மையத்தில், குழந்தைகளுக்கு வழங்குவதற்கு தயாரிக்கப்பட்டிருந்த உணவை உட்கொண்டு, அதன் சுவையை சரிபார்த்தார்.
வெள்ளக்கிணறில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் நல மாணவர் விடுதியை பார்வையிட்டு உணவின் தரம், நுாலகத்துக்கு தேவையான புத்தகங்கள், அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். புத்தகம் வாசிப்பு மற்றும் செய்தித்தாள் வாசிக்கும் பழக்கத்தை தினமும் கடைபிடிக்க வேண்டுமென மாணவர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.