/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'புத்தக வாசிப்பால் எண்ணங்கள் விசாலமாகும்'
/
'புத்தக வாசிப்பால் எண்ணங்கள் விசாலமாகும்'
ADDED : ஆக 13, 2024 01:19 AM
அன்னுார்;அன்னுார் அருகே நல்லி செட்டிபாளையத்தில், 20 ஆண்டுகளுக்கு மேலாக ஊர்ப்புற நூலகம் செயல்பட்டு வருகிறது.
இங்கு, 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. நேற்று இங்கு நூலகர் தின விழா நடந்தது. வாசகர் வட்டத் தலைவர் சண்முகம் வரவேற்றார். வாசகர் வட்ட துணைத்தலைவர் கோபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.
கே.ஜி., கலை அறிவியல் கல்லூரி நூலகர் கணபதி பேசுகையில், தொடர்ந்து புத்தகம் வாசிப்பதால், சமூகத்தின் மீது அக்கறை பிறக்கும். எண்ணங்கள் விசாலமாகும். உறவினர்களிடமும், நண்பர்களுடனும், நல்லுறவு பேண முடியும். ஒரு நூலகம் திறக்கப்பட்டால், ஒரு சிறைச்சாலை மூடப்படும் என்பது பழமொழி, என்றார். விழாவில் நூலகர்கள் ரமேஷ், கருப்புசாமி மற்றும் வாசகர்கள் பங்கேற்றனர்.