/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கிரிக்கெட் மைதானத்துக்கு நில வகை மாற்றம்; தடையின்மை சான்று வழங்க பரிந்துரை

ADDED : ஜூலை 02, 2024 11:08 PM
கோவை;ஒண்டிப்புதுாரில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க, நில வகை மாற்றம் செய்ய தடையின்மை சான்று வழங்க, கோவை மாநகராட்சி மாமன்றத்துக்கு, நகரமைப்பு குழு பரிந்துரைத்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
ஒண்டிப்புதுாரில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க, திறந்தவெளி சிறைச்சாலை அமைந்துள்ள இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது, அவ்விடம், 'அரசு புறம்போக்கு - திறந்தவெளி சிறைச்சாலை' என்ற வகைப்பாட்டில் உள்ளது.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறைக்கு நில மாறுதல் செய்ய, மாநகராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றித் தர கோரப்பட்டுள்ளது.
நில மாறுதல் செய்வதற்கு தடையின்மை சான்று வழங்க, கோவை மாநகராட்சி நகரமைப்பு குழு தலைவர் சந்தோஷ் தலைமையில், நடந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி, மன்றத்துக்கு பரிந்துரைக்கப்பட்டது.
புதிதாக அமையும் கிரிக்கெட் மைதானத்துக்கு, முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயர் வைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நஞ்சப்பா ரோட்டில் உள்ள சர்க்கஸ் மைதானத்தில், நவீன வசதியுடன் விளையாட்டு விடுதி அமைக்கவும், ஒப்புதல் அளிக்கப்பட்டது.
கூட்டத்தில், நகரமைப்பு அலுவலர் குமார், உதவி நகரமைப்பு அலுவலர்கள் ஜெயலட்சுமி, ஹேமலதா, சத்யா, கவிதா மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.